மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ( 22.07.2023 நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநிலம் முழுவதும் 100 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னை


இத்திட்டத்தின் தொடக்கமாக,  மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.07.2023 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.


முன்னணி நிறுவனங்கள் 


இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பளிக்கும் முன்னணி நிறுவனங்களுடனான கூட்டம் 17.07.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும் தலைமையேற்று நடத்தினர். இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அரசு இணை செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குநர், ஆகியோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் MRF டயஎஸ்., இந்தியா சிமெண்ட்ஸ்,. Michelin, ஏ.பி.டி, மாருதி, அப்பலோ டயர்ஸ், அசோக் லேலாண்ட், ஃபாக்ஸ்காம் டெக்னாலஜி, ஹூண்டாய் மோட்டார்ஸ், யமகா இந்தியா, ஜெ.பி.எம். ஆட்டோ,ஜெ.கே. டயர்ஸ்,, Mitsuba India, ராயல் என்ஃபீல்டு,  Salcomp Technologies, Seyoon Technologies, Tube Products, Wheels India Ltd. Zebronics, Saint-Gobain, Westside, Trent Ltd. India Tata Electronics உள்ளிட்ட 25 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், FICCI, CII, போன்ற தொழில் கூட்டமைப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் கூட்டமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.


இவ்வேலைவாய்ப்பு முகாமில்  300க்கும மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 30,000க்கும் மேற்பட்ட முன்னணி காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?


இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்,  பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள். பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.


https://forms.gle/6zc1DiKgeGzSpETK6 - வேலைதேடும் இளைஞர்கள் என்ற Google Link-ல் பதிவு செய்யாலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.