தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • ANM

  • லேப் டெக்னீசியன்

  • ஹாஸ்பிடல் வோர்க்கர்

  • SBHI டேட்டா என்ட்ரி

  • Programme cum administrative Assistant

  • பல் மருத்துவர்

  • பல் மருத்துவ உதவியாளர்

  • MMU Cleaner

  • பல்நோக்கு உதவியாளர்

  • Mid-Level Health Providers (MLHP) 

  • Siddha Hospital Worker

  • Ayurveda Medical Officer


கல்வித் தகுதி:



  • அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி நிறுவனத்தில் ANM  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • லேப் டெக்னீசியன் பணிக்கு  MLT  டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

  • வோர்க்கர் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • SBHI Data Entry Operator படிப்பிற்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் டைப்பிங் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  •  Programme cum administrative உதவியாளர் இளங்கலை பட்டத்துடன்  MS Office, Accountancy தெரிந்திருக்க வேண்டும்.

  • பல் மருத்துவர் பணிக்கு BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவம் துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • எம்.எம்.யூ. க்ளீனர் பணிக்கு 8-வது படித்திருக்க வேண்டும்.

  • பல்நோக்கு பணியாளர் பணிக்கு 12-வது தேர்ச்சி. உயிரியல், விலங்கியல் பாடங்களை பயின்றவராக இருக்க வேண்டும்.

  • MLHP பணிக்கு DGNM/B.Sc Nursing/B.Sc Nursing ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சித்தா மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு 8-வது படித்திருக்க வேண்டும்.

  • ஆயுர்வேத மெடிக்கல் அதிகாரி பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்



  • ANM - ரூ.14,000/-

  • லேப் டெக்னீசியன் - ரூ..13,000/-

  • ஹாஸ்பிடல் வோர்க்கர் -ரூ.8,500/-

  • SBHI டேட்டா என்ட்ரி -ரூ.13,500/- 

  • Programme cum administrative
    Assistant -12,00ரூ.0/-

  • பல் மருத்துவர்- ரூ.34,000/-

  • பல் மருத்துவ உதவியாளர்- ரூ.13,800/-

  • MMU Cleaner- ரூ.18,460/-

  • பல்நோக்கு உதவியாளர்- ரூ.14,000/-

  • Mid-Level Health Providers (MLHP)- ரூ.18,000/- 

  • Siddha Hospital Worker - ரூ.7,800/- 

  • Ayurveda Medical Officer - ரூ.34,000/-


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பங்களை நேரிலோ விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 


விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,


மாவட்ட நல வாழ்வு சங்கம்


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,


கரூர் - 639 007 


விண்ணபிக்க கடைசி நாள் - 06.01.2023


https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/12/2023122630.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை அறியலாம்.


 * கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காலியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர்


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


01.07.2023 -ன் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


இதற்கு மாத ஊதியமாக ரூ.15,700 - 58,100 வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய https://tiruppur.nic.in/notice_category/recruitment/page/2/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர்,


ஊராட்சி ஒன்றியம்,


சங்கராபுரம்


கள்ளக்குறிச்சி


ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் விண்ணப்பிக்கும்போது அந்த முகவரியில் அஞ்சல் அனுப்ப வேண்டும். முகவரி குறித்த விவரங்களுக்கு https://kallakurichi.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.12.2023 மாலை 5.45 மணிக்குள்..