Indian Bank Recruitment: நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் உள்ள காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. பணியிடம் சென்னையா அல்லது மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கிளை அலுவலகங்களிலா என்பது குறித்து வங்கி நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கு விண்ணப்பிக்க வரும் 29-ம்  தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.


பணி விவரம்



  • முதன்மை நிதி அதிகாரி 

  • செயலாலர்

  • மனிதவள துறை அதிகாரி

  • தொழில்நுட்பம் - தலைமை 


கல்வித் தகுதி 



  • முதன்மை நிதி அதிகாரி பணிக்கு பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
     Institute of Company Secretaries of India -இல் உறுப்பினராக இருப்பது கூடுதல் சிறப்பு. 10  ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • கம்பெனி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை சட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • Human Resources பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிர்வாக படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  • தொழில்நுட்ப பிரிவுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக். எம்.டெக், பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 12 ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


இதற்கு 35 வயது முதல் உள்ளவர்கள் 57 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி காலம்


இது மூன்றாண்டு கால ஒப்பந்த பணியாகும். தேவையெனில் பணி காலம் நீட்டிக்கப்படும்.


விண்ணப்ப கட்டணம்


இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். 


பட்டியலின/பழங்குடியின பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகை ஜி.எஸ்.டி-யுடன் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:


“Application for Engagement as Professionals on Contract Basis for Wholly Owned Subsidiary -2024”  என்று குறிப்பிட்டு சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


கவனிக்க..


விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 


நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது. பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.


விண்ணப்பிங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


Chief General Manager (CDO & CLO), 
Indian Bank Corporate Office,
 HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai,
 Royapettah, Chennai, Pin - 600 014,
 Tamil Nadu


30 நாள் ப்ரோ ராடா விடுப்பு கூடுதல் விடுப்பு, ஊதிய விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் - https://indianbank.in/wp-content/uploads/2024/02/Detailed-Advertisement_Final.pdf  -லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.02.2024