வாரணாசி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (BHU) நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில், அங்கு படிக்கும் மாணவரை உபர் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2.05 கோடி சம்பளத்துடன் வேலைக்கு எடுத்துள்ளது. 


ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது பெரும்பாலான கல்லூரி மாணவர்களின் கனவாக இருக்கும். வலிமையான கட்டமைப்பு, தரமான கல்வி, குறைவான கட்டணம், 100 சதவீதம் வேலைவாய்ப்பு ஆகியவற்றை இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் வழங்கி வருகின்றன. 


நாடு முழுவதும் மொத்தம் 23 இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) இயங்கி வருகின்றன. இதில் 16 ஐஐடிகள் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்டவை. 




இந்நிலையில், வாரணாசி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமின் முதல் நாளில், அங்கு படிக்கும் மாணவரை உபர் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2.05 கோடி சம்பளத்துடன் வேலைக்கு எடுத்துள்ளது.. 


இதுகுறித்து வாரணாசி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (BHU) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’ஐஐடி வாரணாசி வேலைவாய்ப்பு முகாம் நேற்று (டிசம்பர் 1ஆம் தேதி) தொடங்கியது. முகாமின் முதல் நாளிலேயே, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான உபர், 5 மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்துள்ளது. இதில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.2.05 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஐஐடி வாரணாசி இயக்குநரும் பேராசிரியருமான பிரமோத் குமார் ஜெயின் கூறும்போது, ’’எங்களுடைய மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியில் திறமை வாய்ந்தவர்களாகவும், புதுமையான சிந்தனை கொண்டவர்களாகவும் குழுவுடன் இணைந்து செயல்படுவோராகவும் இருப்பதை உலகளாவிய சர்வதேச நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. 


கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனங்களான உபர், கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகியவை, எங்கள் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை ஊதியமாக அளித்து வருகின்றன. ஐஐடி வாரணாசி மாணவர்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் தங்களின் வெற்றிகரமான இருப்பை நிலைநாட்டப் பாடுபடுவர்’’ என்று தெரிவித்துள்ளார்.  


ஐஐடி சென்னை, ஐஐடி குவாஹாட்டி, ஐஐடி ரூர்க்கி, ஐஐடி மண்டி உள்ளிட்ட பல்வேறு இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் நேற்று முதல் வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி உள்ளன. இதில் முதல் நாளிலேயே ஐஐடி குவாஹாட்டியில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி சென்னையில் 176 பேருக்கு வேலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொட


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண