இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ஐ.சி.எம்.ஆர்.-Indian Council of Medical Research) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
ஓட்டுநர் & மெக்கானிக் (Project Driver Cum Mechanic)
பணியிடம்:
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், ஆக்ரா, கோரக்பூர், நொய்டா, ஒடிசா, தெலங்கானா, அசாம், குஜராத், மகாராஷ்ட்ரா, கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் தெரிவு செய்யப்படுபவர் நியமிக்கப்படுவர்.
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஊதிய விவரம்:
இதற்கு ரூ.16,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 09.05.2024 காலை 9 மணி முதல் 10 மணி வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor
Sathyamoorthy Road,
Chetpet, Chennai - 600031
விண்ணப்பிக்கும் முறை:
https://forms.gle/VJAe5PDUziFfkzyj6 - இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisment_forDriver26042024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
Job Alert:உதவிப் பேராசிரியர் வேலை; ரூ.2.2 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?