தருமபுரி மாவட்டம் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஆய்வாளர், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக உள்ள அலுவலக உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.
பணி விவரம் :
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு அதிகபட்ச வயது 34 ஆகும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
ஊதிய விவரம்:
மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை அளிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ள பொது நிபந்தனைகள்:
தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தைச் சேர்நதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்ப படிவம்:
https://hrce.tn.gov.in/hrcehome/index.php- என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கல்விச் சான்று, குடும்ப அடையாள அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றின் ஆகியவற்றின் நகல்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள்:
- விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி (கல்வி சான்று நகல்)
- பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்
- மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், சான்றின் நகல்,
- குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல்
- சுயவிலாசமிட்டு ரூ.25 -தபால் தலையுடன் கூடிய உறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,:
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
செங்குந்தர் திருமணம் மண்டப வளாகம்,
பென்னாகரம் ரோடு,
குமாரசாமிப்பேட்டை,
தருமபுரி மாவட்டம் 636 701 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.03.2023 மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/161/document_1.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.