தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) DACE ஆசிரியர் பணி நிரப்ப இருக்காங்க. மாதம் ரூ.80,000 ஆயிரம் சம்பவம். UPSC, TNPSC முடித்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல்: வரும் 15/10/2025 அன்று நடக்கிறது.
திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Tamil Nadu - CUTN), டாக்டர் அம்பேத்கர் சிறப்பு மையத்திற்காக (Dr. Ambedkar Centre of Excellence - DACE) ஒரு ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர் வள நபர் (Faculty Resource Person - Science or Social Science) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியானது 2025 ஆம் கல்வியாண்டிற்காக நியமிக்கப்படுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு (UPSC/TNPSC Group I) பயிற்சி அளிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அறிவியல் அல்லது சமூக அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் (PG/M.A.) பெற்றிருக்க வேண்டும். மேலும், 2015-க்குப் பிறகு நடத்தப்பட்ட UPSC அல்லது TNPSC Group 1 (முதன்மை அல்லது பிரதான) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது இன்றியமையாத தகுதியாகும். சிவில் சர்வீசஸ் பயிற்சி மையங்களில் கற்பித்தல் அனுபவம் இருப்பது கூடுதல் விருப்பமான தகுதியாகும்.
தேர்வு செய்யப்படும் வள நபர், CSAT (எண்ணறி பகுப்பாய்வு, காரணமறிதல், வாசிப்புப் புரிதல்), நெறிமுறைகள் (Ethics), புவியியல், பொருளாதாரம் மற்றும் UPSC/TNPSC Group I முதல்நிலை மற்றும் பிரதானத் தேர்வுகளுக்குத் தேவையான இதர பாடப்பிரிவுகளைக் கற்பிக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட மாத ஊதியமாக ரூ. 80,000/- வழங்கப்படும். இது மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர ஊழியர்களுக்குரிய சலுகைகள் எதற்கும் உரிமை அளிக்காது.
அக்டோபர் 15, 2025 அன்று நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் நடைபெறும் இடம்: DACE, CUTN வளாகம். விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்போது, கட்டாயம் சில அசல் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். +2, UG, PG மதிப்பெண் சான்றிதழ்கள், டிகிரி சான்றிதழ்கள், NET அல்லது Ph.D. சான்றிதழ்கள், முந்தைய பணியிட அனுபவச் சான்றிதழ், மற்றும் UPSC/TNPSC முதல்நிலை/பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரம்
இந்த நியமனம் ஒப்பந்த அடிப்படையிலானது என்பதால், நிரந்தரப் பணிக்கு உரிமை கோர முடியாது. பல்கலைக்கழகத்தின் செயல்பாடு திருப்தியற்றதாக இருந்தாலோ அல்லது நிர்வாகக் காரணங்களுக்காகவோ ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் பல்கலைக்கழகத்திற்கே உண்டு. ஆவணங்களில் போலிகள் கண்டறியப்பட்டால், பணி நியமனம் உடனடியாக நிறுத்தப்படும். சிவில் சர்வீசஸ் கனவில் இருப்போருக்கும், ஆசிரியப் பணி அனுபவம் பெற விரும்புவோருக்கும் இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும். தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.