திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்குட்பட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர்

அந்தநல்லூர், லால்குட், மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், துறையூர், உப்புலியபுரம், வையம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அலுவலகங்களில் தேர்வு செய்யப்படுவர் பணி அனுப்பப்படுவர்.

கல்வித் தகுதி

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியம் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவி செய்தல் வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவர்களும் 32 வயதுக்கு மிகாமில் இருக்க வேண்டும்.

ஊதியம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.15,700 -ரூ.50,000/- வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்க https://tiruchirappalli.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.02.2024 பிற்பகல் 5.45 மணி வரை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

ஆணையர்,

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,

திருச்சிராப்பள்ளி - 639 101

இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://tiruchirappalli.nic.in/notification-for-filling-up-of-vacancies-of-record-clerk-and-office-assistant-in-panchayat-unions-in-tiruchirappalli-district/  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் சனிக்கிழமை (ஜனவரி, 06, (2024) தேதி கடைசி தேதி.

பணி விவரம்

நிர்வாக அதிகாரி (Administrative Officer Scale 1)

மொத்த பணியிடங்கள் - 250

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10+2+3 என்ற முறையில் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.88,000/- வழங்கப்படும். 

( ரூ.. 50925-2500(14)- ரூ.85925-2710(4)- ரூ.96765) 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 30.09.2023 -ன் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிப்பது எப்படி?

https://uiic.co.in/recruitment/details/15004 - - என்ற இணையதள முகவரி மூலம் தேவையான தகவல்களை பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

முக்கிய தேதிகள் 

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/Recruitment%20of%20AO%20Scale%20I.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.01.2024

வருமான வரித்துறை மும்பை பிரிவு, இன்ஸ்பெக்டர், எம்.டி.எஸ். மற்றும் பிற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 19, 2024 ஆகும். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும் வாசிக்க..

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..