மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


பகுதிநேர Medical Referee


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


ஊதிய விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க ரூ.35,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 


ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மாதத்திற்கு 20 செசென்ஸ் இருக்க வேண்டும். 


திங்கள் முதல் வெள்ளி வரை 9.30 முதல் 5.30 வரை பணி இருக்கும். 


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு இ.எஸ். ஐ. அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 


நேர்காணல் நடைபெறும் நாள்:


30.10.2023 - காலை 11 மணி முதல்


முகவரி:


ESI Corporation,
Sub Regional Office, Salem.
No.39/57, Theerthamalai Vaniga Valagam,
Three Roads,
Salem - 636 009


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://srosalem.esic.gov.in/attachments/circularfile/f1eb4b7623a2332ec77c7ee32719b4a2.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விளையாட்டு வீரர்களா? தமிழ்நாடு அரசு வேலை விண்ணப்பிக்கலாம்? 


சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தை இங்கே காணலாம். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


 2018 ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .


சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை 10சி ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF -ன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.


4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 10சி -ல் அங்கீகரிக்கப்பட ISF கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்...


சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும். 


 சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு


விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். n இதற்கு அனைத்து தகுதிகளுடன், 40 வயதிற்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


 விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,.


இதற்கு இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023