மத்திய பணியாளர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (Employees State Insurance Corporation) அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

பகுதிநேர  Medical Referee

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற மத்திய அரசுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதிய விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க ரூ.35,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மாதத்திற்கு 15 செசென்ஸ் இருக்க வேண்டும். 

திங்கள் முதல் வெள்ளி வரை 10.00 முதல் 06:00 வரை பணி இருக்கும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு இ.எஸ். ஐ. அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். 

நேர்காணல் நடைபெறும் நாள்:

25.ஆக்ஸ்ட்,2023 காலை 11 மணி முதல்

முகவரி:

Sub Regional Office, CoimbatoreEmployees State Insurance CorporationPanchdeep Bhavan, # 1897, Trichy Road, RamanathapuramCoimbatore, TN – 641 045 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://srocoimbatore.esic.gov.in/attachments/circularfile/3a827f83ca3067f6d63701a458cd1481.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

****

இந்திய அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு:

இந்தக் காலிபணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பணி விவரம்:

Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக் 

மொத்த காலியிடங்கள்: 30,041  பணியிடங்கள்

தமிழ்நாட்டில் மட்டும் 2,994 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதிகள்:

 அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.indianpost.gov.in https://indiapostgdsonline.gov.in -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

இந்த லிங்க்கில் சென்று விண்ணப்பிக்கவும் https://www.appost.in/gdsonline/home.aspx.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2023

முழு அறிவிப்பிற்காக லிங்க-  https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf

மண்டலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களுக்கு.. https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.