மேலும் அறிய
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி... இதை நம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
பொதுமக்கள் போலி விளம்பரங்களையோ, இடைத்தரகர்களையோநம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.

பொற்கொடி மாவட்ட ஆட்சியர்
Source : whatsapp
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் வாயிலாக அனைத்து சேவைகளும் குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போலி விளம்பரங்களையோ, இடைத்தரகர்களையோநம்பி ஏமாற வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாறவேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Before You Go
Job Recruitment : மாதம் ரூ.1லட்சம் வரை சம்பளம்..! விண்ணப்பிப்பது எப்படி..?
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















