தஞ்சாவூர்: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த இளைஞர்களுக்கு மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணியாற்ற அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Continues below advertisement

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின் (Sports Quota) கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விளையாட்டு சாதனைகளும் கொண்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் ஸ்டெனோகிராபர், டாக்ஸ் அசிஸ்டென்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) உள்ளிட்ட மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பணியில் சேர விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

Continues below advertisement

ஸ்டெனோகிராபர் (Grade-II)

இந்தப் பணிக்கு ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து (Shorthand) எழுதும் திறனும், நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கில தட்டச்சுத் திறனும் அவசியம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை ஊதியம் வழங்கப்படும். வயது 18 முதல் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

டாக்ஸ் அசிஸ்டென்ட்

7 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக, ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8,000 எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 27 ஆண்டுகள்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS)

இந்தப் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுகள்.

விளையாட்டு தகுதி அவசியம்

இந்த வேலைவாய்ப்பு முழுமையாக விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறுவதால், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகளில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். 2026 மார்ச் 31-ஆம் தேதிக்குள் பெற்றுள்ள விளையாட்டு சாதனைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்களின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் முதற்கட்டத் தேர்வு நடைபெறும். மருத்துவத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறன் மதிப்பீட்டிற்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாக பூர்த்தி செய்து, கல்வி, வயது மற்றும் விளையாட்டு சாதனைச் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Deputy Commissioner of Income Tax1st Floor, Aayakar BhawanRajaswa ViharBhubaneswar – 751007

விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 31 ஜூலை 2026

விளையாட்டில் திறமையை வெளிப்படுத்திய இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இந்த அறிவிப்பு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.