திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்படி, மாவட்ட சுகாதார நலச்சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement




பணியின் பெயர் - Consultant (Yoga and Naturopathy) 


காலியிடங்களின் எண்ணிக்கை: 6, கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 59 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 40,000


பணியின் பெயர் : Consultant (Unani) 


காலியிடங்களின் எண்ணிக்கை: 1, கல்வித் தகுதி: BUMS படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 40,000


பணியின் பெயர் - Consultant (Ayurveda) 


காலியிடங்களின் எண்ணிக்கை: 1, கல்வித் தகுதி: BAMS படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 40,000


பணியின் பெயர் - Consultant (Homeopathy)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1, கல்வித் தகுதி: BHMS படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 40,000


பணியின் பெயர்- Therapeutic Assistant


காலியிடங்களின் எண்ணிக்கை: 12, கல்வித் தகுதி: Dip. Nursing Therapy Course படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயது வரையிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 13,000 - 15,000




பணியின் பெயர் - Multipurpose Worker


காலியிடங்களின் எண்ணிக்கை: 6, கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி: 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம்: ரூ. 10,000


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2025/09/17567287572347.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: நிர்வாக உறுப்பினர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், திண்டுக்கல் - 624001. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2025