கடலூர் : கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நவம்பர் 21-11-2025 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் நவம்பர் 21-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு முகாம் விவரங்கள்
- நாள்: நவம்பர் 21-11-2025, (வெள்ளிக்கிழமை )
- நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
- இடம் : எண்.8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், நியூசினிமா தியேட்டர் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
பங்கேற்கும் துறைகள்
இம்முகாமில் வங்கி, நிதி, வாகன உற்பத்தி, கட்டுமானம், காப்பீடு, சில்லரை விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன.
கல்வித் தகுதி
- 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள்.
- ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., படிப்பு முடித்தவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
வேலை தேடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து இந்த முகாமில் பங்கேற்றுப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு (Employment Registration) ரத்து செய்யப்படமாட்டாது என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.