கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆற்றுப்படுத்துநர் (Counselor)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate in Social Work/ Sociology/ Social Science/ Psychology/ Public Health/ Counselling or PG Diploma in Counselling and Communication பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பாக அரசு அல்லது என்.ஜி.ஓ நிறுவனங்களில் ஓர் ஆண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,536
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/09/17587906399177.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2 ஆவது தளம், பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோயம்புத்தூர் - 641018
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2025,இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.