மத்திய அரசின் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 1,130 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (செப்.30) கடைசித் தேதி ஆகும்.
பணி விவரம்: ஃபயர்மேன் கான்ஸ்டபிள் (Constable - Fireman)
மொத்த பணியிடங்கள்: 1130
பணி இட விவரம்:
தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, ஹரியானா, புது டெல்லி, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா, தெலங்கானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மண்டல வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி
அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் +2 வகுப்பு அல்லது பணியிடத்திற்கு தேவையான தகுதி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ளவும்.
ஊதியம் எவ்வளவு?
5-வது லெவல் ஊதிய வரைவின்படி ரூ. 21,700 முதல் 69,100 வரை வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ’allowances’ வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் கணிதம் உள்ளிட்டவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வினா தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
சிஐஎஸ்எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cisfrectt.in என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2024 (இரவு 23.00 மணி வரை)
இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tamilanguide.in/wp-content/uploads/2024/08/CISF-Constable-Fire-Official-Notification-PDFs.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.