சென்னை மாவட்ட வருவாய் பிரிவில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 5-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமான என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

கிராம உதவியாளர்கள் - 12

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

Special Time Scales of pay Matrix Level 6 (Minimum Rs.11,100- Maximum Rs.35,100) என்ற அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட இருக்கிறது. குறைந்தபட்சம் 11,100 ரூபாயில் இருந்து 35,100 ரூபாய் வரை மாதம் ஊதியம் வழங்கப்பட உள்ளது

வயது வரம்பு:

இந்த கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 30.09.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு,  எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்.

கவனிக்க:

விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.  விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கிராம உதவியாள பணியிடத்திற்கு விண்ணப்பிப்பது  எப்படி?

தமிழக அரசின் https://www.tn.gov.in வலைதளம் அல்லது வருவாய் துறையின் இணையதளம் https://cra.tn.gov.in மற்றும் சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்  https://chennai.nic.in மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த மூன்று வலைதள முகவரில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7, 2022

விண்ணப்ப படிவம்- https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-172

 


மேலும் வாசிக்க.

TCS : 20,000 புதியவர்களுக்கு வேலை...பணி சலுகை அளிக்கப்பட்ட அனைவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்...டிசிஎஸ் தகவல்