செங்கல்பட்டில் அரசு வேலை: 50,000 ஊதியம்! 10th படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
Chengalpattu government job: "செங்கல்பட்டு கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கே 52 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, விண்ணப்பிக்க கடைசி தேதி & தகுதி என்ன? உடனே தெரிஞ்சுக்கோங்க!"

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், மாவட்ட அளவில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர்
வயதுவரம்பு : (01-07-2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு)
பொது பிரிவு: 18 முதல் 32 வரை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் : 18 முதல் 34 வரை
ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலின மற்றும் ஆதரவற்ற கைம்பெண் : 18 முதல் 37 வரை
மாற்றுத்திறனாளிகள் : அதிகபட்ச வரம்பிலிருந்து பத்து ஆண்டுகள் வரை நீட்டிப்பு
முன்னாள் ராணுவ வீரர் பொதுப்பிரிவு : 18 முதல் 50 வரை
முன்னாள் ராணுவ வீரர் பிறர் வகுப்பினர்: 18 முதல் 55 வரை
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை : 52
ஊதியம் : Level 2 ( 15900-50400) ரூபாய் வரை
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம்
அனந்தமங்கலம், பாபுராயன் பேட்டை, காட்டுக்கரணை, கிளியாநகர், பள்ளி பேட்டை, சிறுதாமூர், தின்னனூர், பொற்பனங்கரணை ஆகிய 8 கிராமங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
சித்தாமூர் ஒன்றியம்
சித்தாமூர் ஒன்றியத்தில் சித்தாற்காடு, கல்பட்டு, மேல்மருவத்தூர், பூங்குணம், வெடால், விளங்காடு ஆகிய கிராமங்களுக்கு கிராம ஊராட்சி செயலாளர் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் கொளத்தூர், கொண்டைமங்கலம், மேலமையூர், புலிப்பாக்கம், திருவடிசூலம், வெங்கடாபுரம் ஆகிய கிராமங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கான தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
லத்தூர் ஊராட்சி ஒன்றியம்
லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடலூர், கானாத்தூர், லத்தூர், நெல்வாய் பாளையம், பரமன் கேணி, செங்காட்டூர், தண்டரை, தென்பட்டினம் ஆகிய பகுதிகளில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கான தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம்
மதுராந்தகம் ஒன்றியத்தில் கீழக்காண்டை, லட்சுமி நாராயணபுரம், மாமண்டூர், முருகம்பாக்கம், ஓணம்பாக்கம், வேட்டூர், வையாவூர் ஆகிய கிராமங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன
குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்
புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மூவரசம்பட்டு, திரிசூலம் ஆகிய இரண்டு கிராமங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்
திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலந்தூர், இள்ளலூர், காரனை, கீழுர், மாம்பாக்கம், மானாமதி, மேலையூர், பெரிய இரும்பேடு, பெரிய விப்பேடு, செம்பாக்கம் மற்றும் சிறுகுன்றம் ஆகிய கிராமங்களில் கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
குறிப்பு: இனசுழற்சி மற்றும் முன்னுரிமை குறித்த விவரம் புகைப்படத்தில் உள்ளது.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் எடையூர், இரும்புலிச்சேரி, குழிப்பாந் தண்டலம், பாண்டூர் ஆகிய கிராமங்களில் கிராம ஊராட்சி செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி மற்றும் பிற தொகுதிகள் என்னென்ன
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
பொதுப் பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பட்டியல் என பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 ரூபாய் கட்டணம் விசாரிக்கப்படுகிறது.
விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி : நவம்பர் 9ஆம் தேதி 2025
நிபந்தனைகள் என்னென்ன ?
விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இன சுழற்சி வயது மற்றும் கல்வி தகுதி உள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி ?
காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.





















