மத்திய அரசின் கயிறுவாரியத்தில் உதவியாளர், விற்பனையாளர், தட்டச்சர் என பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கடைசி தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


மத்திய அரசின் கயிறு வாரியம், கயிறு தொழில் மேம்பாட்டிற்காக காயர் உத்யமி யோஜனா என்ற கயிறு தொழில் மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வாரியத்தின் கீழ் பல்வேறு தொழில்முனைவோர்கள் உருவாகின்றனர். குறிப்பாக கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல், பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், தேங்காய் மட்டைக் கொண்டு வருமானத்தை பெருக்குதல், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல், தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தைப் புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது, தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது, கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்த வாரியம் செய்துவருகிறது.





இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக உதவியாளர் -09, விற்பனையாளர் – 05, கிளார்க்- 05, ஷோரூம் மேலாளர் – 4, இளநிலை சுருக்கெழுத்தர் – 4, பயிற்சி உதவியாளர் – 3, சீனியர் சயின்டிபிக் ஆபிசர் – 2, மெஷின் ஆபரேட்டர் – 1, ஹிந்தி தட்டச்சர் – 1 என மொத்தம் 36 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இதற்கான விண்ணப்பத்தை நாளை மாலை 6 மணிக்குள் அதாவது செப்டம்பர் 15 ஆம்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு htttp://coirboard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பதாரர்கள் எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறார்களோ? அதற்கேற்றால் போல் ரூபாய் 500, ரூபாய் 400 மற்றும் ரூ. 300 என விண்ணப்பக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை  விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கயிறு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.





தேர்வு செய்யும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுதுத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், தட்டச்சு தேர்வு எழுதியவர்கள், பட்டதாரிகள் அவரவர் தகுதிக்கு ஏற்ப பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://coirboard.gov.in/wp-content/uploads/2021/07/Notification-15.07.2021.pdf  என்ற பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.