அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் (Arulmigu palaniandavar polytechnic  College) காலியாக உள்ள உதவி பேராசிரியர், துறை தலைவர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.


பணி விவரம்



  • விரிவுரையாளர்

  • துறை தலைவர்

  • ஆய்வக உதவியாளர்

  • நூலகர்

  • உதவியாளர்


எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்,மெக்கானிக்கல்,சிவில், பேசிக் இஞ்ஜினியரிங், கணிதம், வேதியியல், இயற்பியல், மார்டன் ஆஃபிஸ் ப்ராக்டிஸ், ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவர்.


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • துறை தலைவர் பதவிக்கு முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • கணிதம், ஆங்கிலம், வேதியியல், ஆங்கிலம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • உடற்கல்வி இயக்குநர் பணிக்கு Physical Education படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • நூலகர் பணிக்கு நூலக அறிவியல் படிப்பில் முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • SLET/SET, NET ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்: 



  • விரிவுரையாளர் - ரூ.56,100/-

  • துறை தலைவர் - ரூ.1,31400/-

  • ஆய்வக உதவியாளர்- ரூ.19,500/-

  • நூலகர் - ரூ.57,700/-

  • உதவியாளர் - ரூ.19,500/-

  • மெக்கானிக் -ரூ.19,500/-

  • உடற்கல்வி இயக்குநர் - ரூ.57,700/-


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு மாறுபடும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பினை காணவும்.


மொத்த பணியிடங்கள் - 40


விண்ணப்பிக்கும் முறை


http://www.palaniandavarpc.org.in/index.html - என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி- 07.12.2023


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


 The Correspondent, Arulmigu Palaniandavar Polytechnic College,
 Palani-624 601,
 Dindigul District


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.palaniandavarpc.org.in/job_application_pdf/Website_details-41_posts.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.