Anna University Recruitment:பொறியியல், பிடெக் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை.யில் வேலை; உடனே விண்ணப்பிங்க!

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

Continues below advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பணி விவரம்:

திட்ட உதவியாளர் (Project Assistant I, II) - 3

தொழில்நுட்ப உதவியாளர் - 1

மொத்த பணியிடங்கள் - 4

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் “AU-NLCIL Innovation Hub for Energy, Environment &
Sustainability “(ANIHEES)”  பிரிவில் பணி புரிய இந்த அறிவிப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 
 
கல்வித் தகுதி:

 முதுகலை பொறியியல் பட்டம், எம்.டெக். படித்தவர்கள் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், பி.டெக். தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், சிவில்,எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.B. E / B. Tech  படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

ஊதிய விவரம்:

திட்ட உதவியாளர் - I - ரூ. 25,000 – ரூ.30,000/-

திட்ட உதவியாளர்- II - ரூ.14,000 - ரூ.55,000/-

தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.ரூ.15,000 - ரூ.18,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு சுயவிவர குறிப்புடன் தேவையான நகல்களுடன்  aniheescoordinator@gmail.com -

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2024 

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய, வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Notice%20for%20Engagement%20of%20Project%20Staff%20(2024-25).pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola