தஞ்சாவூர்: மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (NICL) காலியாக உள்ள 500 அசிஸ்டென்ட் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

நாடு முழுவதும் உள்ள கிளைகளில் பணியாற்ற தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிற்கு 49 பணியிடங்கள்

Continues below advertisement

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, தமிழ்நாட்டிற்கு 49 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் மகாராஷ்டிரம் 57, மேற்கு வங்கம் 46, ராஜஸ்தான் 36, கேரளம் 35, குஜராத் 34, கர்நாடகம் 30, உத்தரப்பிரதேசம் 24, டெல்லி 20 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு இதுதாங்க!!!

2026 ஜூலை 1-ஆம் தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2 ஜூலை 1996-க்கு முன்போ அல்லது 1 ஜூலை 2005-க்கு பிறகோ பிறந்தவர்கள் தகுதியற்றவர்கள்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் அசிஸ்டென்ட் பணியாளர்களுக்கு மாதம் ரூ.63,000 வரை ஊதியம் வழங்கப்படும். பணியிடம் மற்றும் இதர சலுகைகளின் அடிப்படையில் சம்பளத்தில் மாறுபாடு இருக்கலாம்.

இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகள்

விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வுகள் மற்றும் பிராந்திய மொழித் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்நிலை ஆன்லைன் தேர்வு (Preliminary Examination)முதன்மை ஆன்லைன் தேர்வு (Main Examination)பிராந்திய மொழித் திறன் தேர்வு (Regional Language Test)

இந்த அனைத்து கட்டங்களிலும் தகுதி பெறுபவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும்.

பொது, ஓபிசி மற்றும் இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு ரூ.850 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் சில தகுதியான பிரிவினருக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி எப்போ தெரியுங்களா?

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 18 ஜூலை 2026விண்ணப்பிக்க கடைசி நாள்: 7 ஆகஸ்ட் 2026முதற்கட்டத் தேர்வு: 27 ஆகஸ்ட் 2026முதன்மைத் தேர்வு: 30 அக்டோபர் 2026

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: National Insurance Company Limited அதிகாரப்பூர்வ இணையதளம். கால தாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க நண்பர்களே.