புதுச்சேரி காவல்துறையில் நிரப்பபடாமல் உள்ள காவல் துணை ஆய்வாளர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த பணியிடங்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிப்பு.

Continues below advertisement

காவல் துணை ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 1-2/A2/Estt.I (A)/POL/2024

பணி பெயர் : காவல் துணை ஆய்வாளர் Sub-Inspector of Police

காலி பணியிடங்கள் : 70

Continues below advertisement

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

12.9.2025 தேதியின்படி 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் எஸ், எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், எம்பிசி, ஓபிசி, இபிசி, சிபிஎம், பிடி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவத் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உடல் தகுதி:

  • ஆண்கள் 165 செ.மீ உயரமும்., பெண்கள் 154 செ.மீ உயரமும், ஆண், பெண் இருபாலரும் உயரதிற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
  • பெண்கள் குறைந்தபட்சம் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீட்டர் அகலம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வில் ஆண்கள் 100 மீட்டர் தூரத்தை 15 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். பெண்கள் 16.50 வினாடிகளில் ஓடி கடக்க வேண்டும். மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு புதுச்சேரியில் வைத்து நடை பெறும். தேர்வுக்கு வரும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயணக்கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://recruitment.py.gov.in என்கின்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.9.2025 என காவல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது