சர்வதேச வாய் துர்நாற்ற ஒழிப்பு தினம் இன்று மார்ச் 20 கடைப்பிடிக்கப்படுகிறது. வாய்வழி தொற்று, துரித உணவை அதிகமாக பயன்படுத்துதல், வாய் வறட்சி அல்லது எந்தவிதமான போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. நம் வாயில் உள்ள உமிழ்நீர் நம் வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது பல நோய்களிலிருந்து பற்களையும் பாதுகாக்கிறது. இருப்பினும், வாயில் உமிழ்நீர் இல்லாதது பற்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.


வாய் துர்நாற்றம் போக சூயிங்கம் அல்லது இதற்கென்றே விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடல் சிறந்தது. வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.


சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம்:


ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே மக்கள் மத்தியில் வாய் சுகாதாரம் பேணுவதை எடுத்துரைப்பதே ஆகும். மக்கள் தங்களின் வாய் சுகாதாரம், பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.


இந்த ஆண்டுக்கான கருப்பொருள்:


இந்த ஆண்டு உங்கள் வாயை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்  “Be Proud of Your Mouth" என்பதே ஆகும். இது மூன்று ஆண்டுகளுக்கான கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளத். 2021ல் சர்வதேச டென்டல் ஃபவுண்டேஷன் இதனை தேர்வு செய்தது. முதலாம் ஆண்டு பிரச்சாரத்தின் போது வாய்நலத்தின் பொதுவான அவசியங்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு அதாவது 2022ல் மகிழ்ச்சிக்கும் நலனுக்கும் ஆரோக்கியமான வாய் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆண்டு வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தேவை வாய் ஆரோக்கியம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. 


சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தின வரலாறு


சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அந்த நாள் தான் டாக்டர் சார்ல கோடோன் பிறந்தநாள். அவர் யார் என்று கேட்கிறீர்களா? அவர்தான் சர்வதேச டென்டல் ஃபவுண்டேஷனை நிறுவியவர்.  


சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தின வாழ்த்துக் குறிப்புகள்


புன்னகை என்பது எல்லாவற்றையும் நேராக்கும் ஒரு வளைவு: ஃபிலிஸ் டில்லர்
நீ சொல்லும் எல்லாவற்றிற்கும் அவர் புன்னகைக்கிறார். ஏன் தெரியுமா? அவருடைய பற்கள் ஆரோக்கியமாக இருக்கிறது: பெஞ்சைன் ஃப்ராங்க்ளின்
வேறு வழியே இல்லாமல் அமைதியாக இருப்பவர்களுடன் ஒரு உயிர்ப்புடனான உரையாடல் மேற்கொள்ளும் பாக்கியவான்கள் தான் டென்டிஸ்ட்: ஆன் லாண்டர்ஸ்
வாழ்க்கை சிறியது. பற்கள் இருக்கும்வரை சிரிக்கவும்: மேலோரி ஹாப்கின்ஸ்
வலிக்கும் பல் உள்ளே இருப்பதைக் காட்டிலும் வெளியே எடுக்கப்படலாம். ஒரு கெட்ட நபரை இழப்பது உண்மையில் லாபம்: ரிச்சர்ட் பாக்ஸ்டர்