நீண்டகால ரிலேஷன்ஷிப்கள் நல்ல புரிதலுடனும் நட்புடனும் சென்றாலும் சட்டென ப்ரேக் பிடித்து ப்ரேக்கப்பில் கொண்டு போய் நிற்கும்.இதற்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணம் உறவு போரடித்துவிட்டது என்பதுதான். குறிப்பாக இருவருக்கும் இடையிலான செக்ஸ் வாழ்க்கை என்பது போராடித்துவிட்டிருக்கும். தொடக்கத்தில் இருந்தது போல இருவருக்கும் இடையில் அந்த ‘ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு’ என சுவாரசியமான அந்தரங்கம் என்பது மிஸ்ஸாகி விட்டிருக்கும். அதில் தவறு ஏதும் இல்லை, இயல்பான ஒன்றுதான். இருந்தாலும் அது இருவருக்கும் இடையிலான உறவை பாதிக்க விடலாமா? 


அதற்காகத்தான் நிபுணர்கள் சில சுவாரஸ்யமான அட்வைஸ்களைத் தருகிறார்கள்.


செக்ஸ்டிங்


செக்ஸ்டிங் என்பது செக்ஸுவல் டெக்ஸ்டிங் எனப்படுவது. நாம் காதலிக்கத் தொடங்கும்போது ஏதும் பேசுவதற்கு இல்லையென்றாலும், ‘ம்ம்ம்..அப்புறம்’ எனத் தொடங்கி பேசிக் கொண்டிருப்போம். அந்த அப்புறத்தில் இருக்கும் சுவாரஸ்யம்தான் காதலை வாழ்க்கையை வலுவாக்கும். அதுபோலதான் இந்த செக்ஸ்டிங்...’எப்படி கிஸ் செய்யப் பிடிக்கும்?’, ‘எங்கே தொடுவது பிடிக்கும்?’ என சின்னச் சின்னதாக உங்களது செக்ஸ்டிங் வாழ்க்கையைத் தொடங்கலாம். சில பார்ட்னர்களுக்கு போன் செக்ஸ் கூடப் பிடித்தமானதாக இருக்கும். ஒரே வீட்டில் அடுத்த அடுத்த அறையில் அமர்ந்தபடி கூட இதனை முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் நினைவிருக்கட்டும் இது எதுவுமே பார்ட்னரின் விருப்பத்துடன் செய்ய வேண்டும். விருப்பமில்லாதவர்களிடம் இதனைத் திணிப்பது தவறு. 


செக்ஸுக்கான நேரம்


செக்ஸ் என்பது இயல்பாக நிகழ்வது என்றாலும் அதற்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். இந்த நாளில் இந்த நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யும்போது அதனை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என அதற்காக ப்ளான் செய்யத் தொடங்குகிறோம். அதற்கான முன் தயாரிப்புகள் அத்தனையும் செக்ஸை சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது. 


என்ன தேவை என்பதைப் பகிருங்கள்



பார்ட்னர்கள் தங்களுக்கு செக்ஸில் என்ன தேவை என்பதைப் பகிர்வதில்லை. பல வருடத் தாம்பத்தியத்துக்குப் பிறகும் கூட தனக்கு செக்ஸ் தேவையென்றால் கேட்கத் தயங்கும் பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள். செக்ஸில் ஆண்களுக்கு ஆர்காஸம் கேட்காமல் கிடைப்பது போல இன்னமும் பல  பெண்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களுக்குக் கேட்டுப் பெறவும் தெரிவதில்லை. அதனால் செக்ஸில் தனக்கு இது தேவை இப்படித் தேவை என்பதையும், தனக்கு இப்படியிருந்தால் பிடிக்கும் என்பதையும் ஒருவருக்கு ஒருவர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ரோல் ப்ளே பிடிக்குமா?, செக்ஸ்டிங் பிடிக்குமா? என்ன பொசிஷனில் உடலுறவு பிடிக்கும்? என வெளிப்படையாகவே கேள்விகளைக் கேட்பது இருவருக்கும் இடையிலான அந்த பப்பிளை உடைக்கும். காதலிக்கு சாக்லேட் ஐஸ்க்ரீம் பிடிக்கும் எனத் தெரிந்துகொள்வது போலத்தான் இதுவும். அதனால் தயக்கம் வேண்டாம்.