Human Dead Body: உயிரிழந்த பிறகு மனித உடல் நீரில் மூழ்காததற்கான அறிவியல்பூர்வ காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மனித உடல்:


நீச்சல் தெரியாமல் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் சென்றால், உடல் கீழ் நோக்கி இழுக்கப்படும் என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள் அல்லது உணர்ந்திருப்பீர்கள். அந்த நேரத்தில் கை, கால்களை அசைத்து நீச்சலடிப்பதன் மூலம், நாம் மூழ்காமல் தப்பிக்கிறோம். அதேநேரம், உயிரற்ற சடலங்கள் பல நீர் நிலைகளில் மூழ்காமல் மிதப்பதையும் காண முடியும். உயிருள்ள மனித உடல் கீழே இழுக்கப்படும் வேளையில, உயிரற்ற சடலங்கள் மட்டும் நீரில் மூழ்காமல் மிதப்பது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா? இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் , ஆனால் இதற்குப் பின்னால் பல அறிவியல் காரணங்கள் உள்ளன. ஏன் இப்படி நடக்கிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


இறந்த உடல் ஏன் மிதக்கிறது?​ ​


ஒருவன் நீரில் மூழ்கும்போது அவனுடைய நுரையீரல் தண்ணீரால் நிரம்புகிறது. உயிருள்ள சூழ்நிலையில் நுரையீரலில் காற்று உள்ளது, இது உடல் மிதக்க உதவுகிறது. ஆனால் நுரையீரல் தண்ணீரால் நிரம்பினால், உடலின் அடர்த்தி தண்ணீரை விட அதிகமாகி உடல் மூழ்கிவிடும் .


அதேநேரம், மரணத்திற்குப் பிறகு மனித உடல் அழுகத் தொடங்கும். அந்த நேரத்தில் ​​பாக்டீரியாக்கள் உடலில் இருக்கும் கரிமப் பொருட்களை உடைக்கத் தொடங்குகின்றன. இந்த செயல்பாட்டில், வாயுக்கள் உருவாகின்றன. இது உடலை மிதக்கச் செய்கிறது. மேலும், இறந்தவர் காற்று வெளியேறுவதை தடுக்கும் ஆடைகளை அணிந்திருந்தால், உடல் தண்ணீரில் மிதக்க உதவும். இது தவிர, வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையைப் பொறுத்து நீரின் அடர்த்தி மாறுபடும். குளிர்ந்த மற்றும் குறைந்த உப்புத்தன்மை கொண்ட நீரில் உடல் எளிதாக மிதக்கலாம். மேலும் உடலின் நிலை அது மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதை தீர்மானிக்கிறது. உடல் தண்ணீரில் நிமிர்ந்து நின்றால் , அது மிகவும் எளிதாக மூழ்கிவிடும். ஆனால், உடல் தண்ணீரில் படுத்தபடியோ அல்லது தலைகீழாகவோ இருந்தால், அது மிதக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது .
                  


மனித உடல் இறந்த பிறகு தண்ணீரில் மூழ்காததன் காரணம்:


இறப்புக்கான காரணத்தை வைத்தும் உடல் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதை தீர்மானிக்க முடியும் . உதாரணமாக , ஒருவர் நீரில் மூழ்கி இறந்தால் , அவரது நுரையீரலில் தண்ணீர் நிரம்பி, உடல் மூழ்கும். ஆனால் மாரடைப்பால் ஒருவர் இறந்தால், அவரது நுரையீரலில் காற்று தங்கி, உடல் மிதக்கும். மேலும், குளிர்ந்த நீரில் உடலின் அடர்த்தி அதிகரிப்பதால், குளிர்ந்த நீரில் உடல் விரைவாக மூழ்கிவிடும். இது தவிர, மெலிந்தவர்களின் உடலை விட கொழுத்தவர்களின் உடல் எளிதாக மிதக்கும் .