அண்மையில் நெட்ப்ளிக்ஸில் பிர்ஜர்டன் என்கிற தொடரைப் பார்க்க நேர்ந்தது. விக்டோரியா காலத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள். தனக்கான மாப்பிள்ளையைத் தேடிக் கொள்வதற்கென்றே அவர்கள் எப்படி மெருகேற்றப்பட்டார்கள் என இன்ச் பை இன்ச்சாகப் பேசியது அந்த தொடர். அது மட்டுமல்ல, செக்ஸ் என்றால் என்னவென்ற தெரியாத ஒரு பெண் முதன்முதலில் ஆர்காஸம் என்கிற விஷயத்தை அணுகுவது தொடங்கி, தனது பார்ட்னருடனான முதல் உடலுறவு, அதன் பிறகு தனது பாலியலை எப்படி அணுகுகிறார்(Exploring Sexuality) என நேர்த்தியாகவே காட்டியிருந்தார் இயக்குநர்.தனக்கான சுய இன்பம் தொடங்கி பார்டனருடனான பல்வேறு உடலுறவின்போது அந்த கதாப்பாத்திரத்திடம் கவனித்த விஷயம் அவர் முனகுவது. பார்ட்னர்கள் இருவருமே செக்ஸில் முனகுவது இயல்பு.
இயல்பாகவே செக்ஸில் முனகும் காதலர்கள் ஒரு ரகம் என்றால். சினிமாவில் மட்டும்தான் செக்ஸின்போது முனகுவார்கள் நிஜவாழ்க்கையில் உடலுறவின்போது பல்லைக் கடித்தபடி இருப்பதுதான் நல்ல குணநலன் என தனக்குத்தானே வட்டமிட்டுக் கொள்ளும் காதலர்களும் மற்றோரு ரகம்.
இவர்களுக்காகவேன்றே உடலுறவின்போது ஏன் முனகுகிறார்கள் என செக்ஸ்பெர்ட்களிடம் கேட்டோம்.
“நம் வீட்டில் நாய் பூனை போன்ற செல்லப்பிராணிகள் இருந்தால் அவை ஒன்றுக்கொன்று சண்டையிடும்போது குரைத்தோ, சப்தமிட்டோ தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும். அதே போல செக்ஸின்போது முனகுவதும் ஒரு வெளிப்பாடு” என்கிறார்கள் அவர்கள். இது மிகவும் அடிப்படையான நிலைகளில் மிகவும் இயல்பானதொரு வெளிப்பாடு என்கிறார்கள் அவர்கள்.
"நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நம் உடலின் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறோம். சோமாடிக் நரம்பு மண்டலம் செயல்பாட்டைக் குறைத்துக் கொள்கிறது, அதன் விளைவாக வெளிவரும் ஒலிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது."
சில நேரங்களில் செக்ஸ் என்பது ஈகோ போர். பார்ட்னரின் ஈகோவைக் குறைக்க மற்றவர் போலியாக முனகுவதும் உண்டு. பொதுவாக முனகுவது என்பது செக்ஸில் க்ரீன் சிக்னல். அதாவது நாம் செய்வது நமது பார்ட்னருக்குப் பிடித்துள்ளது என பொருள். முனகினால் அது நன்றாக உள்ளது, அதையே தொடர வேண்டும் என பொருள். அதுவே அமைதியாக இருந்தால் அது பிடிக்கவில்லை எனப் பொருள். ஆனால் அதுவே எல்லா நிமிடங்களிலும் சரியானதாக இருப்பதில்லை. நமது இந்தியக் காதலர்களைப் பொருத்தவரை பெரும்பாலானவர்கள் தயக்கப்பட்டுக்கொண்டே முனகுவதைக் கட்டுப்படுத்துவார்கள். அதனால் அவர்களில் நாம் செய்வது பிடித்துள்ளதா எனக் கேட்டுவிட்டே செக்ஸில் ஈடுபடுவது நல்லது.
முனகுதல் என்பது செக்ஸின்போது உதவுவதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. உங்கள் பார்ட்னர் போலியாக முனகுகிறாரா அல்லது உண்மையாகவே பிடித்திருக்கிறதா என்பதைக் கண்டறியும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். உண்மையாகவே பிடித்திருக்கும் தருணங்களில் அவர்களைச் சுற்றி எழுப்பிக் கொண்டிருக்கும் திரையை அவர்கள் விளக்கி மனதோடு மனதாகப் பேசும் வாய்ப்புகள் அதிகம். அந்தரங்கமான தருணங்களில் மனம்விட்டுப் பேசுவதை விட ஒரு காதலில் வேறு என்ன நெருக்கம் இருந்துவிடப் போகிறது?