தவறான நேர்மறை எண்ணங்கள் (Toxic Positivity)என்பது மக்கள் தங்கள் உணர்ச்சி வலி அல்லது கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், எல்லா சூழல்களிலும் நேர்மறையான சிந்தனைகளையே எண்ண வேண்டும் என்கிற தவறான எதிர்பார்ப்பை புரிதலைக் கொண்டிருப்பது. அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அது எதிர்மறை உணர்ச்சிகளை கண்டுகொள்ளாமல் விடுகிறது, துக்கத்தை அல்லது இழப்பை தவிர்க்கச் செய்கிறது, மேலும் மக்கள் கஷ்டப்படும்போதும் மகிழ்ச்சியாக இருக்க அழுத்தம் கொடுக்கிறது"




தவறான நேர்மறை எண்ணங்கள் அறிகுறிகள் என்ன?


"நேர்மறையாக இருங்கள்", "பிரகாசமான பக்கத்தைப் பாருங்கள்" மற்றும் "எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது" போன்ற சொற்றொடர்கள் அனைத்தும் தவறான நேர்மறை எண்ணங்கள் அறிகுறிகளாகும். இந்த கருத்துக்கள் பெரும்பாலும் நல்ல நோக்கத்துடன் சொல்லப்பட்டாலும் மற்றவர்கள் துன்பத்தை எவ்வாறு அணுகுவது எனத் தெரியாததாலேயே இது நிகழ்கிறது. இருப்பினும், உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் இதுபோன்ற பழக்கங்களைக் கண்டறிவது முக்கியம்.


உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள் 


நீங்கள் அடிக்கடி சிரமங்களைத் தவிர்த்து, உங்கள் உள்ளார்ந்த உணர்ச்சிகளை மறைப்பதைக் உணர்ந்தால் அல்லது மற்றவர்களுடன் நீங்கள் இதேபோல் நடந்துகொள்வதை உணர்ந்தால், நீங்கள் தவறான நேர்மறை எண்ணங்களில் சிக்கியிருக்கலாம். இதன் காரணமாக, உங்கள் அறிவாற்றல் செயல்முறையை மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது, நீங்கள் உங்களை கட்டுப்படுத்தவில்லை அல்லது யதார்த்தத்தை சமாளிக்க முடியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதை அடுத்து ஒரு செயலைக் கடந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தை விடுத்து நீங்கள் ஏன் அதனால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை உணருங்கள். 


உங்கள் உணர்ச்சிகளை இயல்பாக்குங்கள்


கஷ்டங்களையும் சவாலான சூழ்நிலைகளையும் கையாள்வதில் நம் அனைவருக்கும் வெவ்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும், வெளியே வலுவான நபர் என்கிற கண்ணோட்டத்தை பராமரிக்க உங்கள் உணர்ச்சிகளை அடக்கினாலோ அல்லது புறக்கணித்தாலோ, நீங்கள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிப்பீர்கள். துக்கம், சோகம், கோபம், தனிமை போன்றவற்றை உணர்வது மனித இயல்பு. ஆனால் அந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என வகைப்படுத்துவது உங்கள் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


சமூக ஊடகங்களுக்கு சற்று ஓய்வு கொடுங்கள்


சமூக ஊடகங்கள் நாம் இப்படித்தான் வாழவேண்டும் என்கிற எண்ணத்தை நமக்குள் விதைக்கிறது. அதிகமான பாசிட்டிவ் பக்கங்களையும் அட்வென்ச்சர் பக்கங்களையும் பார்ப்பவர்களுக்கு நிஜ வாழ்க்கை பலருக்கு அப்படித்தான் இருக்கும் என்கிற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நம் வாழ்க்கை இப்படி இல்லையே என்கிற ஏக்கத்தையும் நம் வாழ்க்கையை நாம் வாழாமல் பிறர் போல வாழவேண்டும் என்கிற தவறான எண்ணத்தையும் விதைக்கிறது. இதுவும் ஒருவகையான தவறான வகையிலான நேர்மறை எண்ணமே. 


நீங்கள் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டவர் என்றால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.