மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவது இன்னும் பலருக்குத் தயக்கம்தான். அந்தத் தயக்கத்தை தகர்க்கும் வகையில் மாதவிடாய் கால சந்தேகங்களுக்கு தனது அனுபவப் பூர்வமான பதில்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் டாப்ஸி. மாதவிடாய் கால வயிற்று வலி ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மாதவிடாய் கால வயிற்றுவலிக்கு கையில் எப்போதும் சுடுதண்ணீர் பாட்டிலை வைத்திருப்பேன்.
வயிற்றில் அதனை வைத்துக்கொண்டு அமர்ந்தால் வயிற்று வலிக்கு இதமாக இருக்கும். அல்லது ஹெர்பல் டீ அருந்துவேன். எக்காரணத்தைக் கொண்டு வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டதில்லை. தினமும் உடற்பயிற்சி செய்வதால் தசை வலுவாகும் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி ஏற்படும்போது உடல் வலு உறுதுணையாக இருக்கும்” என்றார்
மாதவிடாயை ட்ராக் செய்ய என்ன ஆப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டதற்கு, Laiqa நிறுவனத்தின் பீர்யட் பால் அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.அந்த ஆப் நமது பீர்யட்ஸை ட்ராக் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்மிடம் கையிருப்பாக நாப்கின் இருக்கிறதா இல்லையா என்பதையும் உறுதி செய்யும். கூடுதலாக மாதவிடாய் பற்றிய மூடநம்பிக்கைகளை போக்க ஒரு குழு அமைத்து அது தொடர்பான விவாதங்களை ஏற்படுத்துகிறது எனவும் கூறினார்.
இவர் நடித்துள்ள லூப்லப்பேட்டா திரைப்படம் அண்மையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது.