பொதுவாகவே நம்மூரில் நம் மண்ணில் நம் நாட்டின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப விளையும் தானியங்களும், காய்கறிகளும், பழங்களும் தான் நம் உடலுக்கு சிறந்தது உகந்தது என்பர். ஆனால் அதற்காக வேறு நாட்டிலிருந்து வந்த காய், கனிகளை புசிக்கக் கூடாது என்றில்லை. அப்படி அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ட்ராகன் பழத்தைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.  இந்தப் பழம் கற்றாழை இனத்தைச் சேர்ந்தது மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இது மிகவும் பிரபலமானது, அங்கு இது பிடாயா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 


உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் சிறந்த தேர்வு. ஏனெனில் இது கலோரிகள் இல்லாத பழம். இதன் விதைகள் பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது.


இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது.


இதில் உள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது.


டிராகன் பழம் நார்ச்சத்து நிறைந்த பழம். மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு டிராகன் பழம் கைக்கொடுக்கும். இதயத்திற்கும் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. உங்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்:


புளிப்புச் சுவையுடைய இந்தப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஏனெனில் இது மிகவும் சத்தானது, சில ஆய்வுகள் இதனை நீரிழிவுக்கான சாத்தியமான சிகிச்சையாகவும் பரிந்துரைக்கின்றன. இவை கணைய பீட்டா செல்களை மீளுருவாக்கம் செய்து உடல் பருமன் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் டிராகன் பழம் நீரிழிவு எதிர்ப்பு விளைவை உருவாக்குகிறது என்று விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.


இந்த பழத்தின் குறைந்த கிளைசிமிக் குறியீடு காரணமாக இதனை நீரிழிவு நோயாளிகள் தாராளமாகச் மதிப்பெண்ணால் சாப்பிடலாம். போதுமான அளவு சாப்பிடுவது நல்லது. GI குறியீடு இதற்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையாகவே உள்ளது எனலாம். அதனால் டிராகன் பழத்தை உட்கொள்வதை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.


டிராகன் பழம் பொதுவாக அதிக ஊட்டமளிக்கும் வெப்பமண்டல பழமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக ப்ரீயாபெட்டிக் நோயாளிகளுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. டிராகன் பழம் உட்கொள்ளல் கூடுதலாக ஒருவரின் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துகிறது. மற்றொருபுறம், நீரிழிவு நோயைத் தடுக்கவும், அதிக குளுக்கோஸை நிர்வகிக்கவும் டிராகன் பழம் கைகொடுக்கிறது. டிராகன் பழம் சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த பழத்தின் அனைத்து நிறங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.


டிராகன் பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அதிகப்படியான மூலமாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.