செக்ஸ் விந்தணு முந்துதல் (Premature ejaculation) இந்தியாவில் சுமார் 39 சதவிகித ஆண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறது அரசு என்.சி.பி.ஐ நிறுவனத்தின் ஆய்வுகள். உங்கள் பார்ட்னருக்கு நீண்ட நேரம் உடலுறவு கொள்வது பிடிக்கும் என்னும் நிலையில் உங்களுக்கு செக்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விந்தனு வெளியேறிவிட இருவருக்குமே அங்கே சங்கடமான சூழல் ஏற்படும். இதற்கான தீர்வாக ஸ்ப்ரே ஒன்று தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


எப்படி உபயோகிப்பது?


உடலுறவுக்கு ஐந்து நிமிடம் முன்பு இந்த ஸ்ப்ரேயை ஆணுறுப்பில் அப்ளை செய்யும்போது அது விந்தணு விரைந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் செக்ஸ் வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பெரும்பாலும் இந்த வகை ஸ்ப்ரேக்கள் அமெரிக்கச் சந்தையில் அதிகம் கிடைக்கின்றன. இந்தியச் சந்தையில் இதுகுறித்தப் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் பரவலாகக் கிடைப்பதில்லை.


ஸ்ப்ரே உபயோகிப்பதால் பக்கவிளைவு ஏற்படுமா?


இந்த ஸ்ப்ரேயை அடிக்கடி உபயோகிப்பதால் நாளடைவில் உச்சமடைவது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகலாம். சிலருக்கு ஸ்ப்ரே அலர்ஜி ஏற்பட்டு எரிச்சல், நமச்சல், சிவந்து போதல், அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். சில நேரங்களில் இது உங்கள் பார்ட்னரையும் பாதிக்க வாய்ப்பு உண்டு.


செக்ஸில் விந்தனு முந்துதல் எதனால்? 


தைராய்டு சிக்கல், எக்ஸ்டஸி போன்ற போதைப் பொருட்களை உபயோகிப்பது, மன அழுத்தம், உறவுச்சிக்கல், செக்ஸ் குறித்த பதற்றம், உடலுறவில் கடந்தகாலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், மென்மையான ஆணுறுப்பு உள்ளிட்டவை காரணமாக செக்ஸில் விந்தணு விரைந்து வெளியேற வாய்ப்பு உண்டு.


நிரந்தரத் தீர்வு என்ன? 


ஸ்ப்ரே உபயோகிப்பதை நிபுணர்கள் நீண்ட நாட்களுக்கு அட்வைஸ் செய்வதில்லை. நிரந்தரத் தீர்வாகவும் அவர்கள் இதனைப் பரிந்துரைப்பதில்லை. செக்ஸ் தெரபிக்குச் செல்வது, அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்வதை அவர்கள் பரிந்துரைக்கின்றனர். 


செக்ஸ் தெரபி: 


பெரும்பாலானவர்களுக்கு விந்து முந்துதல் மனநலன் சார்ந்த பிரச்னையாகவே இருப்பதால் செக்ஸ் தொடர்பான மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்வதே இதற்கான தீர்வைத் தரும். செக்ஸ் தெரபிஸ்ட் எனப்படும் அவர் இதற்கான மாற்று வழிகளைப் பரிந்துரைப்பார். 


பழக்கவழக்கத்தில் மாற்றம்:


மாஸ்ட்ருபேஷன் செய்யும் பழக்கம் இருக்கும் நபர்களுக்கு இயல்பாகவே வேகமாக விந்தணுவை வெளியேற்றும் பழக்கம் இருக்கும். அதனால் உடலுறவின் போதும் விந்தணு வேகமாக வெளியேறப் பழகிவிடும். இந்த முறையை மாற்றுவதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். 



மருத்துவ முறை: 


தைராய்டு உடல்ரீதியான பிரச்னைகள்தான் விந்தணு முந்துதலுக்குக் காரணமாக இருக்கும் நிலையில் தகுந்த பாலியல் மருத்துவரிடம் காண்பித்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.