ஒரு குறிப்பிட்ட மாறுபாட்டின் சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் என்பது உண்மைதான். அதனால்தான் கோடை நாட்களில் நம்மில் பலர் இதை வழக்கமாக தடவிக் கொள்கிறோம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதில் மிகவும் அக்கறை உள்ளவர்களால் சன் ஸ்க்ரீனின் முக்கியத்துவம் நன்கு உணரப்படுகிறது. ஆனால் நீங்கள் இன்னும் வெளியே செல்வதற்கு முன் சன் கிரீம் அணியலாமா வேண்டாமா என்பதில் குழப்பமாக இருந்தால், இந்தப் பகுதியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது சன் ஸ்க்ரீன் தொடர்ச்சியாகத் தடவும் ஒரு மூதாட்டியின் அனுபவக் கதை. 92 வயது மூதாட்டி ஒரு பகுதிக்கு மட்டும் சன் ஸ்க்ரீன் தடவும் பழக்கம் உடையவர்.
அவர் சன் ஸ்க்ரீன் தொடர்ச்சியாகத் தடவும் புகைப்படம் ஒன்று அண்மையில் ஐரோப்பிய அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி அண்ட் வெனிரியாலஜியின் ஜர்னலில் பகிரப்பட்டது. இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம், சூரியனில் மிக நீண்டகாலமாக வெளிப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பற்ற சருமத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைக் காட்டுகிறது. இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, புகைப்படத்தில் உள்ள மூதாட்டி தொடர்ந்து UV-பாதுகாப்பான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தினார் ஆனால் கழுத்துப் பகுதியில் மாய்ஸ்சரைசர் தடவுவதைத் தவிர்த்து வந்தார்.இந்த பழக்கம் முகம் மற்றும் கழுத்தில் மிகவும் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தியது. அவரது முகம் மிருதுவாகத் தோன்றினாலும், அவரது கழுத்தில் 'கருப்பு புள்ளிகள் மற்றும் தழும்புகள் ஆகியவை தென்பட்டன. ஆனால் சருமம் மிகவும் சுருங்கத் தொடங்கியது.
சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தொடர்ந்து வெளிப்படுவதால், பாதுகாப்பற்று கழுத்து சருமம் வேகமாக மூப்படைகிறது, இது போட்டோஜிங் என்று அழைக்கப்படுகிறது.
"பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் முதுமை அடைவதை நம்மால் தடுக்க முடியாது.அது சாத்தியமில்லை என்றாலும், நாம் நோயின்றி வாழும் ஆரோக்கியமான காலத்தை நம்மால் மாற்றி அமைக்க முடியும்" என்று அந்த ஜர்னலில் டாக்டர் கிறிஸ்டியன் போஷ் என்பவர் எழுதியுள்ளார்.
"புற்றுநோய்களைத் தடுப்பது உட்பட வயது தொடர்பான நோய்களைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் இத்தகைய முன்னேற்றங்கள் உணரப்படும். புற்றுநோயின் அடையாளங்களுக்கும் முதுமையின் அடையாளங்களுக்கும் இடையே கணிசமான ஒற்றுமை ஒன்று இருப்பதும் அதற்கு காரணம்," என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்த முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்கிறோமோ இல்லையோ! கட்டாயம் சன் ஸ்க்ரீன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தற்போது உங்களுக்கு உறுதியாகி இருக்கும்.