நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு தொந்தரவு, வாயு தொந்தரவு. வாயுத் தொல்லை இருந்தால், சாப்பிடாமலேயே சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு இருக்கும். வயிற்று உள்ளே ஏதோ கனமான  ஒரு பொருள் இருக்கிற மாதிரி, கணமாக இருக்கும். மேலும், ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். நம்மால் நிம்மதியாக சாப்பிடவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல், பெரும் அவஸ்தையாக இருக்கும். அதிலும் வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி, மாறி பாடாய் படுத்திவிடும். அதிகப்படியான வாயு வயிற்றில் தங்குவதால்தான், இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதைவிடவும் இதனால் ஏற்படும் துர்நாற்றம், பக்கத்தில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்து, நம்மை தர்மசங்கடத்திற்கு உள்ளாகி விடும். இந்த வாயு தொந்தரவு ஏற்படுவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன. இந்த உப்புச தொல்லைக்கு சிறந்த எளிமையான தீர்வு மூலிகை தேநீர் அருந்துவதே ஆகும்.


பெப்பர்மின்ட் தேநீர்


பெப்பர்மின்ட் தேநீர் எளிமையான சுவையான மனம் நிறைந்த தேநீர். இதில் செடிகளுக்கே உரித்தான் ஃப்ளேவனாய்ட்ஸின் நன்மைகள் உள்ளன. இதில் உள்ள மனம் உங்களை காலை வேளையில் புத்துணர்ச்சி பெறச் செய்யும். குடலை சுத்தப்படுத்தும்.


இஞ்சி தேநீர்


இஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது நீங்கள் ஹெவியான ஒரு உணவை உண்ட பின்னர் சிறந்த தீர்வைத் தரும். வயிறு உப்புசம், வாயுத் தொல்லையால் ஏற்படும் வயிற்று வலியை இந்த இஞ்சி டீ சரி செய்யும்.


எலுமிச்சை தேநீர்


எலுமிச்சை தேநீர் என்பது உடல் எடையை குறைக்க மட்டுமே அருந்தப்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். எலுமிச்சை தேநீரில் உப்புசத்தைக் கட்டுப்படுத்தும் பண்பு உள்ளது. இது உங்கள் வாழ்க்கைமுறையை சிறந்ததாக மாற்றும். வயிற்றில் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் இருந்தால் எலுமிச்சை தேநீர் அருந்தலாம்.


சாமந்திப்பூ தேநீர்


சீமை சமாந்தி எனும் chamomile tea மன அழுதத்தை குறைக்க, தூக்கமின்மையில் இருந்து விடுபட உதவுகிறது. சீமை சாமந்தி பூக்களை நிழலில் உலர்த்தி காயவிடவும். நன்கு கொதிக்கும் நீரில் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு சீமை சாமந்தி பூவை போட்டு மூடி வைக்கவும். 2-3 நிமிடங்களில் வடிக்கட்டி தேன், வெல்ல சர்க்கரை சேர்த்து சாப்பிடாலம். இந்த தேநீருடன் உடன் எலுமிச்சை பழச் சாறு சிறிது சேர்த்து பருகினால், உற்சாகத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாது வாயுத் தொல்லை, உடல் உப்புசத்தை போக்குகிறது.


கொத்தமல்லி தேநீர்: 
கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகலாம்.
 
புதினா இலை தேநீர்: 
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.


பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படும். ஏற்கெனவே வயிறு உப்புச தொல்லை அல்லது லேக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் உற்சாகத்திற்காக இதுபோன்ற தேநீர் அருந்தலாம். ஆரோக்கியம் பேணலாம்.