Walking Exercise : வாக்கிங் செய்வதால் இத்தனை பலன்களா? இந்த ஈஸியான உடற்பயிற்சிகள் பற்றி தெரியுமா?

உடற்பயிற்சி மற்றும் வொர்க்அவுட்டானது உளவியல் அழுத்தத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்பதற்கான ஆதாரங்களை ஆய்வுகள் நிரூபித்துள்ளன

Continues below advertisement

எந்த வகையான வேலை செய்பவராக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதி. வாழ்க்கைத் தரம் குறைவதற்கும், ஆரோக்கியத்துக்கு கேடு உண்டாவதற்கும் மற்றும் உற்பத்தித் திறன் குறைவதற்கும் வழிவகுப்பதாக உணர்ந்துள்ளனர். உடற்பயிற்சி மற்றும் வொர்க்அவுட்டானது உளவியல் அழுத்தத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்பதற்கான ஆதாரங்களை ஆய்வுகள் நிரூபித்துள்ளன எனவே தீவிர உடற்பயிற்சிதான் என்று இல்லாமல் எளிய வகையிலான உடற்பயிற்சிகளும் அதற்கு உதவும்...

Continues below advertisement

இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், “நடைபயிற்சி என்பதும் ஒருவகையில் உடற்பயிற்சிதான்! இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பலர் அதை சலிப்பாகக் கருதுவதால் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்கு என சில பாசிட்டிவ்கள் உள்ளன...உதாரணத்துக்கு நீங்கள் அதை நாளின் எந்த நேரத்திலும் செய்யலாம். உங்கள் பணி அழைப்புகளின் போது நீங்கள் நடக்கலாம்; நீங்கள் காரை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக மாலுக்கு நடந்து செல்லலாம் அல்லது லிஃப்ட்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளில் ஏறலாம்... நடைபயிற்சிக்கு சிறப்புப் பயிற்சியோ மருத்துவச் சோதனையோ தேவையில்லை. காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு." என்கிறார்.


அவர் மேலும் கூறுகையில், "இது பல நோய்களுக்கு மருத்துவ பயிற்சியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறவும், புதிய காற்றைப் பெறவும், மக்களைச் சந்திக்கவும், உரையாடவும் வாய்ப்பளிக்கிறது. நடைபயிற்சி கார்டிசோலை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உங்களை புத்துணர்ச்சியுடனும் உணர வைக்கிறது, குறைக்கப்பட்ட கார்டிசோல் அளவு கொழுப்பு இழப்பு, சிறந்த தூக்கம் மற்றும் உயர்ந்த மனநிலையை ஊக்குவிக்கிறது” என்கிறார்.

ஒரு உடற்பயிற்சி முறையைத் தொடங்கும் போது, பெரும்பாலான மக்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர் அல்லது ஒரு பிரபலத்தின் பயிற்சித் திட்டங்களை இணையத்தில் பார்க்க முனைகிறார்கள் “சில சமயங்களில், இந்தத் திட்டங்களைப் பார்க்கும்போது, நீங்கள் ஓட வேண்டும், குதிக்க வேண்டும், உங்களை நீங்களே சேலஞ்ச் செய்து முடிவுகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பெறலாம்.  ஆனால் இந்த திட்டங்கள் உங்களுக்கு சரியானதா? ஆரம்பநிலையில் இருப்பவர்கள், வயதானவர்கள் மற்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யத் திரும்பும் எவரும் இண்டன்ஸ் வொர்க் அவுட் முறையைத் தவிர்க்க வேண்டும். அதிலும் உங்களுக்கு முழங்கால் வலி அல்லது கீழ் முதுகு வலி இருந்தால் உங்களுக்குத் தீவிர உடற்பயிற்சிக்கு ஸ்ட்ரிக்ட் நோ தான்.

அவர் பரிந்துரைக்கையில், “ஜம்பிங் ஜாக்ஸ், பர்பீஸ், பாக்ஸ் ஜம்ப்ஸ், ஸ்க்வாட் ஜாக்ஸ், ரன்னிங், சைட் டு சைடு ப்ளையோ லஞ்சஸ் போன்ற ப்ராக்டீஸ்களைச் செய்யலாம். இந்த ப்ராக்டீஸ்களுக்கு நேரம் இடம் உள்ளது. ஆனால் நீங்கள் தொடக்க நிலையில் இருப்பவர் என்றால் பயிற்சிகளைச் செய்ய இது சரியான ஐடியாவாக இருக்காது. எந்த உபகரணமும் இல்லாமல் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய எளிய உடற்பயிற்சி திட்டத்தை அவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நீங்கள் இடைநிலைப் பயிற்சியாளராக இருந்தால், வலியின்றி நாற்காலியில் அமர்ந்து  செய்ய முடியாது.

எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் வீட்டில் செய்யக்கூடிய சில மாதிரிப் பயிற்சிகள் பட்டியலிடப்படுகின்றனர். மேலும் நீண்ட மன அழுத்தமான நாளின் முடிவில் பயிற்சி செய்வது உங்களை நன்றாக உணர வைக்கும்.

1. ஸ்குவாட்ஸ்

2. குளுட் பிரிட்ஜஸ்

3. வால் புஷ்-அப்ஸ்

4. ஸ்டைர் க்ளைம்பிங்

5. டெட் பக்ஸ்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola