எனவே வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தவிர்க்க மழைக்கால மருத்துவ முகாம்கள் 10 வாரங்களில் பத்தாயிரம் இடங்களில் நடந்தபட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சென்னை பெசன்ட் நகரில் ஹெல்த்வாக் நடைபாதை அடுத்த மாதம் நவம்பர் 4 ஆம் தேதி அன்று பொது மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அதற்கான ஆய்வு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி , சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் நடைபயிற்சி திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற நான்காம் தேதி சென்னை பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் வாக் நடைபாதையை திறந்து வைப்பதுடன் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இந்த நடை பயிற்சி திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

Continues below advertisement

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு  சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலைகளில் காலை 5 மணிக்கு தொடங்கி காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பெசண்ட் நகர் முத்துலட்சமி பூங்காவிலிருந்து நடைபயிற்சி மேற்கொண்டு பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மற்ற 37 மாவட்டங்களிலும் இந்த health walk என்ற திட்டத்தினை தொடங்கி வைக்கிறார். இதில்அரசியல் மற்றும் சினிமா துறையில் இருக்கக்கூடிய  5000 மேற்பட்ட நடைபயிற்சி மேற்கொள்ளும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம்  தொடங்கப்பட்ட நாள் முதல் மாதந்தோறும்  முதல் ஞாயிற்றுகிழமைகளில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். மேலும் நடப்பவர்களுக்கு ஓ ஆர் எஸ் கரைசல், குடிநீர், எலுமிச்சை சாறு போன்றவை வழங்க சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது

இதற்கான நிதி அந்தந்த தொகுதி சட்டமன்ற உறிப்பினர் மற்றும் சி எஸ் ஆர் நிதி தொகுதி நிதியில் செய்யப்பட்ட உள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு சமீப காலமாக இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது , மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் அவசியம் ஆகிறது எனவே சுகாதார துறையின் சார்பில் ஹெல்த்வாக் திட்டம் முன்னெடுக்கபட்டுள்ளதாக”, தெரிவித்தார்.

மேலும், “ அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில் அவற்றை தமிழக அரசே நிரப்பி கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது , இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கை அடுத்த கட்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரத்து 600 பேர் டெங்குவினால்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 5 பேர்  உயிரினம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக டெங்கு பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தவிர்க்க மழைக்கால மருத்துவ முகாம்கள் 10 வாரங்களில் பத்தாயிரம் இடங்களில் நடந்தபட உள்ளது என்றார். 

அதன்படி வருகின்ற 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதத்தில்  நான்கு வாரங்கள் , டிசம்பர் மாதத்தில் 5 வாரங்கள் என பத்து வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில்  1000 முகாம் வீதம்  பத்தாயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என தெரிவித்தார்.