முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த முடியும். மாம்பழத்தில், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மாம்பழத்தின் பயன்:
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும். வைட்டமின் சி, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். பிரி ரேடிக்கல்களால் உண்டாகும் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற ஊதாக்கதிர்கள் மற்றும் மாசுக்களால் உண்டாகும் பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
மாம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6, வைட்டமின் கே, பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் சருமத் துளைகளில் படியும் அழுக்கையும், கூடுதல் எண்ணெய்ப் பசையையும் நீக்கும். பாக்ரியா மற்றும் தீமை செய்யக் கூடிய கிருமிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சுருக்கங்கள், கோடுகள், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஆகியவற்றை குறைக்கும்.
என்னென்ன வழிகள்?
இத்தகைய நன்மைகள் நிறைந்த மாம்பழத்தைக்கொண்டு முக அழகை மேம்படுத்தும் வழிகள் இங்கே...!
மாம்பழத்தின் சதைப்பகுதியை சிறிது எடுத்து, அதனுடன் சிறிதளவு முல்தானி மட்டி சேர்த்து பசை போல கலக்கவும். இதை முகம் முழுவதும் பூசவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும், இதனால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். முகப்பருக்களால் சிரமப்படுபவர்கள், மாம்பழக் கூழை பருக்களின் மேல் தடவவும். 15 நிமிடங்க ளுக்கு பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத் தைக் கழுவவும், இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் முகப்பரு பிரச்சினை திரும்
மாம்பழத்தை நன்றாக அரைத்த பிறகு 2 ஸ்பூன் எடுத்து அதில், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை காற்றுப்புகாத கண்ணாடி குப்பியில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும், வெயில் காலங்களில் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பியதும், இதை சிறிது எடுத்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால் வெயிலால் சருமத்தில் ஏற்படும் கருமை நீங்கும்.
அதேபோல அரைத்த மாம்பழத்தில் இருந்து 2 ஸ்பூன் எடுத்து அதில், 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி வட்ட இயக்கத்தில், மென்மையாக 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதனால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
2 டீஸ்பூன் மாம்பழக்கூழுடன், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இதன் மூலம் மூகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி பொலிவு அதிகரிக்கும்.