ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி ஜோடியை அறிந்தவர்கள் நிச்சயம் அவர்களுடைய சூப்பர் ஹிட் படமான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் பார்த்திருக்கக் கூடும். ஒருவர் பற்றிய ரகசியத்தை மற்றொருவரிடமிருந்து மறைத்ததற்காக கணவன் மனைவி இருவருமே வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு கோபத்தில் இருப்பார்கள். ஆனால் திடீரென இருவரும் கோபத்தோடு முத்தமிட்டுக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் காட்சி இடம்பெறும். இந்தக் காட்சியை ‘ஹாட் ரொமான்ஸ்’ என வர்ணித்தார்கள் ரசிகர்கள். படம் அதன் கதைக்காகவே சூப்பர்ஹிட். ஆனால் நிஜவாழ்க்கையில் இந்த ஹாட் ரொமான்ஸ் எடுபடுமா? இதுபோன்ற சண்டைக்குப் பிறகான உடலுறவு (Make-up sex) சரியா? தவறா? உளவியல் நிபுணர் சொல்வது என்ன? 


சண்டைக்கு செக்ஸ் தீர்வா?


திருமணமான புதிதில் ஜோடிகள் ஒருவருக்கு ஒருவர்  தனக்குப் பிடித்தது இது பிடிக்காதது இது எனப் பேசித் தெரியப்படுத்தாமல்  தன் மீது நல்ல இம்ப்ரெஷன் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் தனது பார்ட்னர் என்கிற ஒரே காரணத்துக்ககவே நிறைய விட்டுக் கொடுப்பார்கள். இதனால் பார்ட்னருக்கும் தனது இணையைப் பற்றியபோதிய புரிதல் இல்லாமல் இருக்கும். இந்த  அட்ஜஸ்ட்மெண்ட்ஸ் ஆரம்ப காலங்களில் இனிப்பாக இருந்தாலும் போகப் போகத் தாக்குப் பிடிக்க முடியாது.


புதிதாகக் கமிட் ஆன காதலர்களிலும் இந்தச் சிக்கல் உண்டு. அதனால் அட்ஜெஸ்ட்மெண்ட் போகப் போக அடிதடி சண்டையாக மாறக் கூடும். ‘நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லை!’ என முகம் சுளிப்பார்கள். முடிவு, பிரச்னைகள் எதுவோ அதனைப் பேசித் தீர்ப்பதை விட்டுவிட்டு மேக்-அப் செக்ஸில் முடித்திருப்பார்கள். 




செக்ஸ், இணைகளிடையே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு அளித்துவிடும் என்கிற நம்பிக்கை. செக்ஸ் உங்கள் உடலுக்குதான் ரிலாக்ஸ் தருமே ஒழிய உங்கள் பிரச்னை நீங்கள் விட்டுவந்த இடத்தில் அப்படியேதான் இருக்கும் என்கிறார் உளவியல் நிபுணர். மேலும் சண்டையின் போது உண்டான அத்தனை எதிர்மறை எனர்ஜியும் உடலுறவில் வெளிப்படும் என்கிறார்.விளைவு, மீண்டும் சில நாட்களிலேயே அதே பிரச்னை வேறு வடிவத்தில் வெளியே வரும். 


ஒரு பிரச்னை காரணமாக எதிரும் புதிருமாக இருப்பவர்க் எப்படியேனும் இணைந்து விட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் உண்டாவதுதான் இந்த ரக செக்ஸ், இதனால் உண்மையான மேக்-அப் செக்ஸில் இருக்கும் த்ரில்லையும் இவர்கள் மிஸ் செய்ய நேரிடும் என்கிறார். 



என்ன செய்ய வேண்டும்?


சண்டைக்கான தீர்வு என்ன எனத் தெரியாமல் செக்ஸ் என்கிற ஏரியா பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது என அட்வைஸ் செய்கிறார். பிரச்னை என்ன என்பதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் அல்லது எப்படியெல்லாம் பிரச்னையைத் தீர்க்கலாம் என இருவரும் ஒன்றாக அமர்ந்து திட்டமிடுங்கள்.இணையர்களிடையே ஒரு ஆழமான உண்மையான மனம் திறந்த விவாதத்துக்குப் பிறகு ஏற்படும் உடலுறவில் உன்னதம் அதிகம் என்கிறார்.