2020 மார்ச் மாத காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 56 வயதான நபர் ஒருவர், 18 மாதங்களுக்குப் பிறகும் குணமடையவில்லை, இதனால் அவர் டல்லாஸுக்கு அருகிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாட்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு நினைவு தப்புதல் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன.
"யாரும் கவலைப்படுவதில்லை. யாரும் என் நிலை குறித்துக் கேட்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை," என்று டெய்லர் ஒரு நண்பருக்குத் தனது இறுதி உரையில் எழுதியுள்ளார், நீண்ட நாட்ப்பட்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் சார்பாகத் தனது அவலநிலையைப் பற்றி பேசியிருக்கும் அவர் பல ஆண்டுகள் அல்லது மாதக்கணக்கில் நீடிக்கும் அந்தத் தொற்று பற்றி விவரித்துள்ளார்.
"முழுமையான சோர்வு, வலி, அயற்சி, முதுகுத்தண்டின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வலி இல்லாமல் என்னால் சலவை கூடச் செய்ய முடியாது. உலகமே சுற்றுவது போலத் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. நான் ஏதோ சில விஷயங்களைச் சொல்கிறேன், ஆனால் என்ன சொல்கிறேன் என்று தெரியவில்லை," என அவர் தனது டெக்ஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
லாங் கோவிட் என்பது ஒரு சிக்கலான மருத்துவ நிலை, இது 200 க்கும் மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் கண்டறிய கடினமாக உள்ளது சோர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாடு முதல் வலி, காய்ச்சல் மற்றும் இதயத் துடிப்பு வரை இதற்கான அறிகுறிகள் உலக சுகாதார மையத்தின் பட்டியலின்படி ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
பாதிக்கப்பட்டவர்களிடையே தற்கொலைகளின் அதிகரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தரவு எதுவும் இல்லை. யு.எஸ். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மற்றும் பிரிட்டனின் தரவு சேகரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பல விஞ்ஞானிகள், நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்ததற்கான சான்றுகளைத் தொடர்ந்து அதற்கான சாத்தியமான இணைப்பைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். இத்துடன் அறியப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
"கோவிட் நீண்ட காலமாக தற்கொலை எண்ணங்கள், தற்கொலை முயற்சிகள், தற்கொலைத் திட்டங்கள் மற்றும் தற்கொலை மரண அபாயத்துடன் தொடர்புடையது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தாலும் எங்களிடம் தொற்றுநோயியல் தரவு இல்லை," என்று நியூவில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டத்தின் மனநல மருத்துவர் லியோ ஷெர் கூறுகிறார். வைரஸ் மூளை உயிரியலை மாற்றுவதால் நோயாளிகளிடையே தற்கொலை ஆபத்து அதிகரிக்குமா? அல்லது மற்ற நீண்ட கால சுகாதார நிலைமைகளில் நிகழக்கூடியது போல், நோய்க்கு முந்தைய காலத்தில் அவர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செயல்படும் திறனை இழப்பது மக்களை விளிம்பிற்குத் தள்ளுமா? உள்ளிட்ட முக்கியக் கேள்விகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
"நாம் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று மருத்துவர் லியோ ஷெர் மேலும் கூறினார்.
சியாட்டிலை தளமாகக் கொண்ட சுகாதாரத் தரவு நிறுவனமான ட்ருவேட்டாவால் நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வில், நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கோவிட் நோயால் கண்டறியப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, ஆரம்ப கோவிட் நோயறிதலின் 90 நாட்களுக்குள் முதல் முறையாக ஆண்டிடிரஸன் மருந்துகளைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறது.