காலை உணவு என்பது அன்றைய மிக முக்கியமான உணவாகும், மேலும் போதுமான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நாளைத் தொடங்குவது முக்கியம். பல சிறந்த காலை உணவு சமையல் வகைகள் உள்ளன, ஆனால் முளைகட்டிய பயறு ஒரு நல்ல காலை உணவு தேர்வாக இருக்கும்.
முளைகட்டிய பயறு நம் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதைப் பற்றி நாம் நிறைய படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். உணவியல் நிபுணர் சுமன் திப்ரேவாலா, தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், காலை உணவில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை விளக்கியுள்ளார்.
முளைகட்டிய பயறில் என்ன நன்மைகள் எல்லாம் இருக்கு தெரியுமா?
சுமன் திப்ரேவாலா முளைகட்டிய பயறின் ஊட்டச்சத்து மதிப்பு தொடர்பான தகவலுடன் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் "முளைகட்டிய பயறு ஊட்டச்சத்தின் ஆற்றல் மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் முளைகட்டிய பயறில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. முளைகட்டிய பயறு இந்த ஊட்டச்சத்துக்களின் உயிர் கிடைக்கும் தன்மையையும் அதிகரிக்கிறது" என்று மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் சுமன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுமன் திப்ரேவாலாவின் கூற்றுப்படி, முளைகட்டிய பயறு ஆக்சிஜனின் நல்ல மூலமாகும் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன.
“முளைகட்டிய பயறில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. அவற்றில் அத்தியாவசிய கொழுப்பு அமில உள்ளடக்கமும் முளைகட்டுவதால் அதிகரிக்கிறது,” என்று சுமன் திப்ரேவாலா மேலும் கூறினார்.