காற்று மாசுபாடானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது கரடு முரடான தூசுக்கள்,கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவற்றின் காரணமாக நம் உடம்பானது பாதிக்கப்படுகிறது அதிலும் குறிப்பாக கண்களானது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறது.


எவ்விதமான கண் பிரச்சனைகள் இல்லாத நபர்களுக்கு இத்தகைய காற்று மாசுபாட்டினால் பெரிய அளவில் பிரச்சினைகள் உண்டாகின்றன. கண் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மேலும் சிரமத்தை உண்டாக்குகிறது. மேலும் அதிக உணர்வுத் திறன் கொண்டவர்களான குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு  காற்று மாசுபாட்டினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது. ஏனெனில் குழந்தைகளும் முதியவர்களும் மென்மையான உடல்வாகை பெற்றிருப்பார்கள் இதனால் எவ்விதமான தடையும் இல்லாமல் நேரடியாக காற்றுடன் தொடர்புடைய கண்களானது நிறைய பாதிப்புக்கு உள்ளாகிறது


இத்தகைய காற்று மாசுபாட்டினால் கண்களில் நீர் வடிந்து கொண்டே இருப்பது,கண் எரிச்சல்,கண் வீக்கம், சிவந்த கண்கள் மற்றும் கண்களில் அரிப்பு போன்றவை ஏற்பட்டு நமக்கு பெரிய தொந்தரவுகளை தருகிறது


நகர்ப்புறங்களில் குறிப்பாக மாநகரங்களில் இந்த காற்று மாசுபாடானது மிகப்பெரிய பிரச்சினைகளை கொண்டு வருகிறது. சுவாசக் கோளாறுகள் உடம்பில் அரிப்புகள் மற்றும் கண்களில் பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமையை கொண்டு வருகிறது.


இத்தகைய தரம் இழந்த காற்றின் காரணமாக நமது கண்களை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் சொல்லும் சில பயனுள்ள தகவல்களை பார்க்கலாம்.


குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கண்களில் நுண்துகள்கள் நுழைந்தாலும்,அவற்றைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கண்களை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
வெளியில் வாகன  மற்றும் தொழிற்சாலை புகை அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே செல்வதை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். பெரியவர்கள் வெளியே செல்லும் பட்சத்தில் சன்கிளாஸ்கள் அணிந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இத்தகைய கண்ணாடிகள் கூட மருத்துவரின்  பரிந்துரையின் பெயரில் சாதாரண கண்ணாடிகள் இருக்கும்படியாக பார்த்து வாங்கவும் ஏனெனில் இதில் தூரப்பார்வை மற்றும் கிட்ட பார்வைக்கு ஏற்றார் போல பவர் கிளாஸ் எனப்படும் கண்ணாடிகள் நிறைய இருக்கின்றன இவற்றை தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும்.


முகமூடிகள் நம் நுரையீரலுக்குச் செல்லும் காற்றில் இருக்கும் மாசுகளை எவ்வாறு வடிகட்டுகிறதோ இதைப் போலவே, கண்ணாடிகள் நம் கண்களுக்கு காற்றின் மூலம் வரும் தூசுக்களை தடுத்து கண்களை பாதுகாக்கிறது. மேலும்  கண்களில் பிரச்சனைகளுக்காக மருத்துவரை  கலந்தாலோசித்தீர்கள் என்றால், அவர்கள் தரும்  கண் மருந்துகளை, ஒரு நாளைக்கு 2-3 முறை,கண்  கண்களில் இட்டு,கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இது கண் தசைகளை தளர்த்த உதவும்.
கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நிறைய நீர் ஆகாரங்களை குடிக்க கொடுங்கள். ஏனெனில் நீர் ஆகரங்களை உட்கொள்வது,உடலுக்கும் கண்களுக்கும் சிறந்தது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுகிறது.


வீட்டில் இருக்கும் தூய்மையான தண்ணீரைக் கொண்டும்,அடிக்கடி உங்கள் கண்களை சுத்தப்படுத்தலாம். ஒரு அகண்ட பாத்திரத்தில், சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முகத்தை முழுகச் செய்து, கண்களை நன்றாக திறந்து பாருங்கள்,பின்பு கண்களை இடது புறம் இருந்து வலது புறமாகவும், மேலிருந்து கீழாகவும்,சுழற்சி முறையில்,கண்களை அசையுங்கள். இதனால் கண்களில் இருக்கும் தேவையில்லாத அழுக்குகள் மற்றும் தூசுகள் ஆகியவை வெளியேறிவிடும். இதை  மருத்துவரின் ஆலோசனையுடன், வாரத்திற்கு இருமுறை செய்து வாருங்கள்.


வீட்டில் ஏர் பில்டர் எனப்படும் காற்று தூய்மையாக்கிகளை பயன்படுத்துங்கள். இந்த காற்று தூய்மையாக்கிகள், தண்ணீரை அடிப்படையாகக் கொண்டவை.இந்த காற்று தூய்மையாக்கிகளை, பயன்படுத்தும் போது, இது காற்றை உறிஞ்சி, தண்ணீரில் செலுத்துகிறது. இதனால் காற்றில் இருக்கும் தூசுக்கள் மற்றும் தேவையில்லாத அழுக்குகள் தண்ணீரில் தங்கி விடுகின்றன.இதனால் உங்கள் வீட்டில் எப்போதும் தூசுக்கள் இல்லாத காற்றானது இருக்கும். இவ்வாறாக காற்றில் இருக்கும்  தூசுக்கள் மற்றும் இதர வாயுக்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்