அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் உதாரணமாக சொல்லப்படும். அப்படியான வகையில் முட்டைகள் பற்றிய பல கட்டுக்கதைகள் இணையத்தில் பகிரப்படுகிறது. அதன் பின்னணிப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

சத்துக்கள் நிறைந்த முட்டை

முழு முட்டைகள் அதிக சத்துக்கள் நிறைந்தவை. அதனால் தான் சிறு வயதில் இருந்தே நமக்கு பழக்கப்படுத்தப்படுகிறது. புரதம் மற்றும் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக முட்டைகள் பார்க்கப்படுகிறது. முட்டை சாப்பிடுவது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். உடல் எடையைக் குறைக்க அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வை மேம்படுத்த என எந்த வகையில் வேண்டுமானாலும் முட்டை உதவும். 

Continues below advertisement

அதிகமாக முட்டை சாப்பிட்டால் என்னாகும்?

இப்படியான நிலையில் விவேக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாள் ஒன்றுக்கு 7 வேகவைத்த முட்டைகளைச் சாப்பிடுவதாக தெரிவித்திருந்தார். அப்படி சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடும் என்று நெட்டிசன்கள் கமெண்டுகள் மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த விவேக், தினமும் 7 முழு முட்டைகளைச் சாப்பிட்டதால் மொத்த கொலஸ்ட்ரால் 200லிருந்து 180 ஆகவும் குறைந்ததாகக் கூறியுள்ளார். தனது உணவில் இருந்து கோதுமை, மைதாரொட்டி ஆகியவற்றை நீக்கிவிட்டு தினமும் இரவு 7 முழு முட்டைகள் உட்கொள்வதாக கூறியுள்ளார். 

முட்டை சாப்பிடுவது கொலஸ்ட்ராலை நேரடியாக அதிகரிப்பதில்லை என்று பல ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது. ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் முட்டைகளை மிதமான அளவில் தான் எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். ஒரு பெரிய முட்டையில் சராசரியாக 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அப்படி பார்க்கும்போது 7 முழு முட்டைகளில் தோராயமாக 1300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. 

இப்படி செய்வது நல்லதா?

அப்படியிருக்கும்போது எப்படி கொலஸ்ட்ரால் குறைந்திருக்கும்?.. காரணம் விவேக் மைதா, கோதுமை போன்றவற்றை உட்கொள்வ்பதில்லை. அதனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் குறைந்துள்ளது என டாக்டர் வர்திகா விஸ்வானி தெரிவித்துள்ளார். தினமும் இரவு உணவில் ஏழு முட்டைகளை சேர்ப்பது நல்லது, கெட்டது என்பதைக் காட்டிலும் ஒரே உணவை சார்ந்திருப்பது மற்ற உணவுகளை உங்களிடமிருந்து விலக்கி வைக்கக்கூடும். ஆகவே அடிப்படையில் அதனை செய்யாதீர்கள். முட்டையுடன் ஏதேனும் ஒரு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். 

முழு கோதுமை உணவில் உள்ள நார்ச்சத்து உண்மையில் கொழுப்பைக் குறைக்க உதவும். கோதுமை அல்லது ரொட்டியைத் தவிர்ப்பதும் கொழுப்பைக் குறைப்பதற்கு உடனடியாகப் பயனளிக்காது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதேபோல் உணவுப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் இடையே மாறுபடும். பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முட்டையை உட்கொள்வது நல்லது. அதேசமயம் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் அல்லது இதய நோய் அபாயம் உள்ளவர்களுக்கு முட்டை எடுப்பது பற்றி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லதாகும்.