காலை உணவை ஏன் தவிர்க்கக் கூடாது என்பதை எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும் எழுதினாலும் கூட தெரிந்தே பலரும் அதை ஸ்கிப் செய்வது தொடரத்தான் செய்கிறது.


காலை உணவு:


காலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா அந்த சாப்பாடும் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்தும் தான் நமது ஆரோக்கியத்தை. நம் நாளை நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.


இந்த காலை உணவு தான் நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. நமது உடல் தனக்கு தானே ரீசார்ஜ் செய்து கொள்ள இந்த ஊட்டச்சத்து உணவு மிகவும் அவசியம்.


கொழுப்பு நிறைந்த உணவுகள்:


காலை உணவை நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடுவது நல்லது. அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.  


1.உங்களுக்கு இரிடபிள் போவல் சிண்ட்ரோம் என்ற மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உங்கள் காலை உணவில் முதல் உணவாக ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல கொழுப்பு இருப்பது நன்மை தரும். 
 
2. உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் காலை உணவில் கார்ப், காய்கறிகள், புரதம் அத்துடன் கொழுப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். அதாவது ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
 
3. காலையில் உணவில் கொழுப்புச் சத்து இருந்தால் அது மூளை மந்த நிலையை நீக்கும். சுறுசுறுப்புடன் உடலும் உள்ளமும் இயங்க வழிவகுக்கும். இதனால் காலை உணவை நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவாக உண்ணுதல் நல்லது.


காலை உணவை தவிர்த்தால் என்னவாகுமென்பதை இப்போது பார்ப்போம்:


1. சர்க்கரை நோய் வரலாம்:


காலை உணவைப் புறக்கணித்தால் உங்களுக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.


2. இதயத்தை பாதிக்கலாம்: 


காலை உணவை புறக்கணிப்பதால் அது இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பக்கவாதம், இதய நாள நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


3. புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம்


காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


4. சோர்வு ஏற்படும்


காலை எழுந்த பின்னர் உணவருந்தாமல் வேலைக்கும் செல்லும்பட்சத்தில் அந்த நாள் முழுவதும் ஒருவிதமாக எரிச்சல் உணர்வு மேலோங்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. நினைவாற்றல் பாதிக்கும். நாம் செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.


5. உடல் எடை அதிகரிக்கும்


நிறைய பேர் காலை உணவை புறக்கணித்துவிட்டு டயட்டில் இருக்கிறேன். வெயிட் குறைப்பதற்காக சாப்பிடுவதில்லை என்று கூறுவது உண்டு. உண்மையில் காலை உணவைப் புறக்கணிப்பவர்களின் உடல் எடை அதிகரிக்கும். காலை உணவை தவிர்க்கும்போது தீவிரமான ஹங்கர் பேங்ஸ் ஏற்படும். அதாவது இனிப்பு நிறைந்த கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் உண்ணும் வாஞ்சையைத் தூண்டும். இதனால் மதியத்தில் நீங்கள் அளவுக்கு அதிகமாக உண்பீர்கள். இதுவே உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.


இதைப்படித்த பின்னராவது காலை உணவை புறக்கணியாமல் இருங்கள். காலையில் சில நாட்களுக்கு காபிக்கு பதில் ஏதேனும் மூலிகை பானம் உட்கொள்ளலாம். கொழுப்பு கிடைக்கும் முறையை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.