மேலும் அறிய

Bird Flu: பரபரக்கும் பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்கு என்ன ஆபத்து? அறிகுறி, தடுப்பு முறைகள்- முழு தகவல்!

சென்னை மற்றும் அதன் அண்மை மாவட்டங்களில் கொத்துக் கொத்தாக காகங்கள் இறந்துள்ளதன் காரணம் என்ன? H5N1 குறித்த விரிவான பார்வை.

சென்னை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இது வருவது ஏன்? பரவுவது எப்படி? மனிதர்களுக்கு என்ன ஆபத்து? தற்காத்துக் கொள்வது எப்படி என்று பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். 

சமீபத்தில் சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் காகங்களுக்கு மேல் இறந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இறந்த காகங்களிடம் இருந்து பரிசோதனை செய்த போது  "H5N1" எனும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

H5N1 எனும் இந்த வைரஸ் 1996-1997 ஆம் ஆண்டு தென்கிழக்குச் சீனப்பகுதியில் பண்ணையில் வளர்க்கப்படும் வாத்துகளில் இருந்து தோன்றி அங்கிருந்து 2005ஆம் ஆண்டு வாக்கில் வனாந்திரப் பறவைகளுக்குப் பரவி 2022இல் கடல் வாழ் பாலூட்டிகளுக்குப் பரவி தற்போது 2024 முதல் பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் பரவி வருகிறது.

இண்ப்ளூயன்சா வைரஸில்  இரண்டு குடும்பங்கள்

ஏ வகை

பி வகை

மனிதர்களிடம் சீசனல் காய்ச்சலை ஏற்படுத்தி வரும் இண்ஃப்ளூயன்சா வைரஸ்கள் ( H1N1, H3N2) போன்று இது வனாந்திரப் பறவைகளிடமும் வளர்ப்புப் பறவைகள் கால்நடைகளிடமும் தொற்று ஏற்படுத்தி வரும் இன்ஃப்ளூயன்சா(H5N1) வைரஸாகும்.

இரண்டுமே ஏ வகை இன்ப்ளூயன்சா வகை என்றாலும் மனிதர்களிடம் பரவும் வைரஸும் பறவைகளிடம் பரவும் வைரஸும் வெவ்வேறு வகை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த H5N1 உலகம் முழுவதும் வனாந்திரப் பறவைகளுக்குத் தொடர்ந்து பரவி தொற்று நிலையை ஏற்படுத்தி வருகிறது. அவை மூலம் வளர்ப்பு பறவைகளான கோழிகள், கால்நடைகளுக்கும் பரவுகிறது.

H5N1 2.3.4.4b A எனும் வகையறா மிக எளிதாக பறவைகளிடமும் கால்நடைகளிடமும் பரவும் தன்மை கொண்டு விளங்குவதால் இந்தப் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதன்று. சரி.. பறவைகளுக்கு இடையே பரவும் இந்த வைரஸினால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து?

H5N1 தொற்றுக்கு உள்ளான பறவைகள், இறந்த பறவைகள், கால்நடைகள் அவற்றின் எச்சங்கள், உடல் திரவங்கள் ஆகியவற்றை பாதுகாப்பின்றி நேரடியாகத் தொடும் மனிதர்களுக்கு தொற்றுப் பரவல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கறிக் கோழிகள் / முட்டையிடும் கோழிகள் வளர்க்கும் பண்ணைத் தொழிலாளர்கள், மாட்டும் தொழுவத்தில் பணிபுரிவோர், வாத்துப் பண்ணை வைத்திருப்பவர்கள், பறவை நல ஆர்வலர்கள் என்று பலரும் நேரடியாக பறவைகளை தொடக்கூடிய இடத்தில் இருப்பவர்களுக்கு தொற்றுப் பரவல் நடக்கும் ரிஸ்க் இருக்கிறது.

2024 முதல் தற்போது வரை அமெரிக்காவில் 71 H5N1 மனித தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே தொற்று கண்ட பறவைகள், கால்நடைகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.

இப்போது வரை இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் நிலையை அடையவில்லை என்பது நிம்மதி தரும் செய்தியாகும். எனினும், இண்ப்ளூயன்சா வைரஸ்களைப் பொருத்தவரை அவை தன்னகத்தே பல சிறு மற்றும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி உருமாறிய வைரஸாக மாற்றம் காணவல்லது.

மனிதர்களை வருடா வருடம் சீசனல் காய்ச்சல் தாக்குவதும், இந்த இண்ப்ளூயன்சா வைரஸ் தொடர்ந்து தன்னை உருமாற்றி வருவதால்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்க பறவை இனத்தில் அதிகமாகப் பரவிக் கொண்டிருந்த இந்த வைரஸ் தன்னகத்தே பெரிய உருமாற்றத்தைக் கண்டு அங்கிருந்து பாலூட்டி இனங்கள், கால்நடைகள் என்று பரவி வருகிறது.

இது எப்போது தன்னகத்தே அந்த முக்கியமான உருமாற்றத்தை அடைந்து மனிதர்களிடம் "பெருந்தொற்றாகப்" பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே அறிவியலாளர்களின் ஒருமித்தக் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி 1, 2003 முதல் இன்றுவரை 25 நாடுகளைச் சேர்ந்த 1000+ மனிதர்கள் மட்டுமே தொற்று கண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே நேரடியாக தொற்று கண்ட பறவை/ கால்நடைகளிடம் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் மனிதர்களுக்கு இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 50% மரணங்களை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் கடந்த ஆண்டு H5N1 ஆல் இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டன.

தொற்றுப் பரவும் முறை

"தொற்று கண்ட" பறவை/ கால்நடையிடம் நேரடித் தொடர்பில் இருப்பது.

தொற்றின் அறிகுறிகள்

- சாதாரண காய்ச்சல் / இருமல் என்று ஆரம்பித்து தீவிர காய்ச்சல் , தொண்டை வலி, மூச்சுத் திணறல், கண் சிவந்து போதல், வயிற்றுப் போக்கு, மூளைக்காய்ச்சல், பிதற்றல் நிலை, மூர்ச்சை நிலை வரை செல்லலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆபத்து அறிகுறிகள்

- மூச்சு விடுவதில் சிரமம்

- மூச்சுத் திணறல்

- ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரில் SpO2 95க்கும் குறைவாக இருப்பது

- பிதற்றல் நிலை / மூர்ச்சை நிலை

ஆகியவை இருப்பின் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும்.


Bird Flu: பரபரக்கும் பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்கு என்ன ஆபத்து? அறிகுறி, தடுப்பு முறைகள்- முழு தகவல்!

பரிசோதனை

கொரோனா வைரஸுக்கு செய்த ஆர்டிபிசிஆர் (RTPCR) பரிசோதனை இந்த வைரஸுக்கும் உதவும்.

நாசி சளித் தடவல் / தொண்டைத் தடவல் பரிசோதனையில் ஆர்டிபிசிஆர் செய்யப்பட்டு வைரஸ் இருப்பது கண்டறியப்படும்.

சிகிச்சை & மருத்துவம்

இன்ப்ளூயன்சா ஏ வகை வைரஸுக்கு எதிராக செயல்படும் "ஒசல்டாமிவிர்"(OSELTAMIVIR) மற்றும் "சனாமிவிர்" (ZANAMIVIR) அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரங்களுக்குள் மாத்திரை வழங்கப்பட வேண்டும். இந்த ஒசல்டாமிவிர் மாத்திரை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இருப்பு உள்ளது.

தடுப்பூசி

இந்த H5N1 வைரஸ் மனிதர்களிடையே பரவும் ஆற்றலை இதுவரை பெறவில்லை என்பதால் இதற்கு எதிராக மனிதர்கள் செலுத்திக் கொள்ளும் தடுப்பூசி வழக்கத்தில் இல்லை. எனினும் H1N1, H3N2 மற்றும் பி வகை இண்ஃப்ளூயன்சாவுக்கு எதிரான தடுப்பூசி வருடா வருடம் புதுப்பிக்கப்பட்டு மக்களின் உபயோகத்திற்கு கிடைத்து வருகிறது.

இந்தத் தடுப்பூசி H5N1 க்கு எதிராக சிறப்பாக வேலை செய்யாவிடினும் ஓரளவு பயன் தரும் என்று ஆய்வுகள் சான்றியம்புகின்றன.

நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்

- இறந்த / இறக்கப்போகும் பறவைகளைத் தொடக்கூடாது

குறிப்பாக இறந்த காகம்/கோழி/நீர்காகம் கால்நடை உள்ளிட்டவற்றை பாதுகாப்பின்றி கையுறை அணியாமல் தொடக்கூடாது.

- உங்கள் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பறவைகள் இறந்து கிடந்தால் உடனே கால்நடைத்துறைக்குத் தெரியப்படுத்தவும்

- பறவைகள் இறந்த இடத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். இறந்த சடலங்களை முறையாக எரிக்கவோ அல்லது ஆழமாகக் குழி வெட்டி அடக்கமோ செய்ய வேண்டும்

- கோழிப்பண்ணைகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைளை உறுதி செய்து வனாந்திரப் பறவைகளுடன் நேரடி தொடர்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

- பறவைகளை தொட்டு விட்ட பிறகு ஏற்படும் காய்ச்சல் + சளி + இருமல் + மூச்சுத் திணறல் ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

முட்டைகள், கோழிக்கறி, கால்நடை மாமிசங்களை முறையாகச் சமைத்து சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

முட்டைகளை பச்சையாக குடிக்கக் கூடாது. அரைகுறையாக சமைத்து முட்டைகளை உண்பதையும் தவிர்க்கலாம்.

பச்சைப் பால் பருகக்கூடாது. மற்றபடி கறி/ மீன் / முட்டை மாமிசம் சாப்பிடலாம். பிரச்சனை இல்லை.

H5N1 என்பது பறவைகள் / கால்நடைகளிடையே மிக வேகமாக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பரவி வரும் வைரஸ் ஆகும். தற்போது வரை தொற்றுக்குள்ளான பறவை/ கால்நடை ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு மட்டுமே தொற்று பரவல் நிகழ்ந்துள்ளது. மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாக பரவவில்லை.

நோய்க்கு எதிரான வைரஸ் கொல்லி மருந்து "ஒசல்டாமிவிர்" உள்ளது. H5N1 குறித்து இப்போதைக்கு பீதி தேவையில்லை, விழிப்புணர்வு போதுமானது'' என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? இதோ உங்களுக்கா சூப்பர் டிப்ஸ் இருக்கு பாருங்க !
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் 'பொன்னான விதிகள்' இதை செய்தால் போதும் - மருத்துவர்களின் முழு தகவல் !
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
மருத்துவமனையில் மரணக் குழிகள்... உயிர் பயத்தில் நோயாளிகள்...
Kidney Disease Symptoms: சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முத்துவேலை கடத்திய கார்த்திக்.. மாட்டிக்கொண்ட சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Embed widget