உலகில் உள்ள பார்வையற்றவர்களில் கால் பகுதியினர் இந்தியாவில் வசிக்கின்றனர். பார்வை இழப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (NPCB) தயாரித்த ஆய்வின்படி, உலகில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் சுமார் 12 மில்லியன் மக்கள் உள்ளனர்,  இது உலகில் அதிகபட்சமாக 39 மில்லியனாக உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் போலவே, நீங்கள் வயதாகும்போது உங்கள் பார்வை திறனும்  மோசமடைகிறது. அதுமட்டுமின்றி, நாம் அன்றாடம் செய்து வரும், நம் வாழ்வில் ஒன்றிப்போன  பழக்கவழக்கங்கள் நமது பார்வைக்கு தீங்கு விளைவிக்கும். நமது பார்வையை பாதிக்கக்கூடிய ஐந்து தினசரி பழக்கங்கள் குறித்து இங்கு காணலாம்:.


1. அதிகப்படியான திரை நேரம்


உலகம் திரைகளால் நிரம்பியுள்ளது. அவை தொலைக்காட்சிகள், கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் என எல்லா இடங்களிலும் உள்ளன. திரை நேரம் என்பது மக்கள் ஒவ்வொரு நாளும் திரைகளைப் பார்க்க செலவிடும் நேரத்தைக் குறிக்கிறது. அதிகப்படியான திரை நேரம் பார்வையை பாதிக்கலாம் குறிப்பாக குழந்தைகளுக்கு பார்வையில் சிரமத்தை ஏற்படுத்தும், திரையில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், எந்த விதமான உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதற்கும் குறைவான நேரத்தினை செலவிடலாம். எனவே, குழந்தைகள் திரையில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 


2. அதிக அளவில் புகைபிடித்தல்


புகைபிடிப்பதை நிறுத்துங்கள் அல்லது தொடங்கவே வேண்டாம். புகைபிடித்தல் என்பது புகைப்பிடிப்பவரின் நுரையீரல் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிப்பதைப் போலவே கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். புகைபிடித்தல் வயது தொடர்பான மாகுலர் சிதைவு, கண்புரை மற்றும் பார்வை நரம்பு சேதம் ஆகியவற்றை உருவாக்கும் அபாயத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். மேலும், இதனால் ஏற்படும் புற்றுநோயானது 50 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களில் பார்வை இழப்பினையோ அல்லது குறைபாடையோ ஏற்படுத்துகிறது. 


3. மற்ற சுகாதார நிலைமைகளை ஒழுங்குபடுத்தாதது


நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், தைராய்டு போன்ற நாட்பட்ட மருத்துவ நிலைகளை நீங்கள் கவனித்துக் கொள்ளாவிட்டால் உங்கள் கண்பார்வை படிப்படியாக மோசமடையும். 


4. போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியை பராமரிக்காதது


சரியான போதுமான தூக்கம் இல்லாதது கண்கள் வறட்சி, சிவப்பு கண்கள், இருண்ட வட்டங்கள், கண் பிடிப்புகள் மற்றும் ஒளி உணர்திறன் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். தூக்கமின்மையால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மற்றும் நரம்பியல் மாற்றங்கள் போன்ற உடலியல் மாற்றங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மோசமான பார்வையை மேலும் அதிகரிக்கலாம். அதேபோல வீட்டுக்குள்ளேயே இருப்பதும், உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதும் கண்பார்வையை பலவீனப்படுத்துகிறது. தொலைநோக்கு பார்வையின்மை ஓரளவுக்கு மரபியல் சார்ந்தது என்றாலும், தினசரி வெளியில் செல்பவர்களுடன் ஒப்பிடுகையில், வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் குறுகிய பார்வை கொண்டவர்களாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


5. நீரேற்றமாக இருக்காமல் இருப்பது


உடலின் வெப்பநிலை மற்றும் பிற உயிரியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு நமது செல்கள், உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. கண்ணீரின் வடிவில் இருக்கும் நீர், நம் கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வளிமண்டலத்தில் உள்ள தூசி, அசுத்தங்கள் மற்றும் பிற துகள்கள் நம் கண்களை அடைவது இயற்கையானது. கண்களில் ஈரப்பதம் போதுமான அளவுக்கு இல்லை என்றால், ஒருவருக்கு வறண்ட, சிவப்பு அல்லது வீங்கிய கண்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.