தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.


டெங்கு காய்ச்சல்


ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுக்க டெங்கு நோயை தடுக்கும் நோக்கில் மே மாதம் 16ம் நாள் தேசிய டெங்கு தினமாக முக்கியமாக நகரமயமாக்கல், அதிகரித்து வரும் கட்டுமான நடவடிக்கைகள், வேகமாக மக்களின் இடப்பெயர்வு, சமூக மற்றும் வீட்டளவில் திடக்கழிவு மேலான்மையில் கவனம் செலுத்தாதது, மக்களின் பாதுகாப்பற்ற முறையில் நீர் சேமிக்கும் பழக்கம் போன்ற காரணிகள் டெங்கு பரவலுக்கு மிக மிக முக்கிய காரணமாகிறது.


ஏடிஸ் வகைக் கொசுக்கள்


டெங்கு பரப்பும் கொசுக்களான ஏடிஸ் வகைக் கொசுக்கள்  பெருகி டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும் போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் பொழுது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.


டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்



  • கடுமையான வயிற்று வலி,

  • தொடர் வாந்தி,

  • விரைவான சுவாசம்,

  • ஈறுகளில் இரத்தம் கசிதல்,

  • உடற்சோர்வு


 உயிரிழப்பு கூட நேரலாம்


இரத்தத் தட்டு அணுக்கள் இரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணியாகும். டெங்கு வைரஸ் இரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும் தன்மையுடையது. டெங்கு நோய் பாதிப்பால் இரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற  உறுப்புகளிலும், பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் இரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.


 செய்யக்கூடாதது என்ன ?


சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாகவே ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா காய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், ஸ்கரப் டைபஸ், டைபாய்டு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ சிகிச்சை தாமதமானாலோ, சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலோ, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல் நலம் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும். உரிய சிகிச்சையும் முறையான கவனிப்பும் கொடுத்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம். காய்ச்சலுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளை உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும்.


செய்ய வேண்டியது என்ன ?


டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படம் உயிர்காக்கும் ஓஆர்எஸ் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும். காய்ச்சல் குறையவில்லையென்றால் பருத்தியால் நெய்யப்பட்ட சிறிய துண்டை சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் நனைத்து பிழிந்து ஈர துண்டின் மூலம் நெற்றி, கழுத்து, அக்குள், நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் துடைத்துவிட்டால் காய்ச்சல் குறையும்.


முறையான சிகிச்சை


இதற்கு ஐஸ்கட்டியோ அல்லது மிகவும் குளிர்ந்த நீரையோ பயன்படுத்தக் கூடாது. மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க மருத்துவ ஆலோசனை வழங்கினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் நின்ற பிறகு மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லையென்றாலோ சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரிடம் காட்ட வேண்டும். டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். எனவே, காய்ச்சல் அறிகுறி கண்டவுடன் மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறுவது மிக முக்கியமானதாகும். மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி இரத்த பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.


டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இது முட்டையிலிருந்து லார்வா, பியூப்பா என உருமாறி பத்து நாட்களில் கொசுவாக உற்பத்தியாகிறது. ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை  கற்றிட வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்’