தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 27 லட்சத்தைக் கடந்துள்ளது. மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தடம் பதித்த கரோனா பரவல், இன்றளவும் நீடித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய பிறகு பாதிப்பு குறைந்ததே தவிர முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 27,00,593-ஆக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளிக்கிழமை மேலும் 1,039 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 126 பேருக்கும், கோவையில் 118 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருபுறம், நோய்த் தொற்றிலிருந்து மேலும் 1,229 போ் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.52 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,083-ஆக அதிகரித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோணா மூன்றாவது அலை அச்சுறுத்தல்கள் மெல்ல தலைதூக்கும் நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை வேறு துவங்குவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுதியுள்ளார். கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்காமல் சுகாதாரம் பேணுமாறு சுகாதார துறை மக்களிடம் வலியுறுத்தி வருகிறது.



இது தொடர்பாக, சென்னையில் இன்று (அக். 29) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் இதுவரை 400 பேர் டெங்குவால் பாதித்துள்ளனர். அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுக்களால் நோய் வேகமாக பரவும் வாய்பிருப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் வேண்டும். அது மட்டுமின்றி பல நாடுகளில் மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். தமிழகத்தில் புதிய வகை கொரோணா அச்சம் வேண்டாம். அதிகமாக தொற்று ஏற்படும் இடங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து, சென்னையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது, 84% டெல்டா வகை கரோனா தொற்று பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. மீதி 16% சாதாரண கரோனா வைரஸ் தான். ஏற்கெனவே 13 பேருக்கு மட்டும்தான் டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் இதுவரை எந்த புதிய வகை கரோனா தொற்றும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படாது என நம்புவோம்" என தெரிவித்தார்.