திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இன்று புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 83-ஆக பதிவாகியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பு இல்லை.. இதுவரையில் கொரோனா தொற்றால் மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 628 தொடர்கிறது. இதுவரை மாவட்டத்தில்  51 ஆயிரத்து 276  பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு,  49 ஆயிரத்து 688 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் புதிதாக 83 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 103 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். 


 




மேலும், கொரோனா வைரஸ் தொற்றிக்காக மாவட்டத்தில் திருவண்ணாமலை , செங்கம் , ஆரணி , செய்யார் , வந்தவாசி , உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 960 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் 18 வயதில் இருந்து 45 வரையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 8478 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற  முகாமில் கோவிஷீல்டு  முதல் தடுப்பூசி 7649 நபர்களும் இரண்டாவது தடுப்பூசி  545  நபர்களும்  கோவேக்சின் முதல் தடுப்பூசி 94 இரண்டாவது தடுப்பூசி 190 செலுத்தியுள்ளனர். 



திருவண்ணாமலையில் நாளை 36 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி முகாம்கள் அமைத்துள்ள இடங்கள் முத்து விநாயகர் தெரு, சித்தா மருத்துவமனை, புதுதெரு முஸ்லிம் பள்ளி, டவுன்ஹால் நகராட்சி பள்ளி சின்னக்கடை தெரு, குழந்தைகள் நல மையம் நகராட்சி ஆரம்பப்பள்ளி பேயகோபுரம், தியாகி அண்ணாமலையார் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னியன் குளத்தெரு, சண்முக அரசு மேல்நிலைப்பள்ளி செங்கம் ரோடு, நகராட்சி நடுநிலைப்பள்ளி தாமரை நகர், நகராட்சி தொடக்கப்பள்ளி காக்கா நகர், நர்சரி பள்ளி சூர்யா நகர் இடங்களில் பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் பொதுமக்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் , முகக்கவசம் அணியாமல் வெளியே வரவேண்டாம், கைகளுக்கு சானிடைசர் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


முகக்கவசம் அணியுங்கள். சமூக விலகலை நிச்சயமாக கடைபிடியுங்கள்.


Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )


Calculate The Age Through Age Calculator