மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 84 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72066-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 76 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 70360 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1084 இருக்கிறது. இந்நிலையில் 622 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.





விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 68 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44354-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 89 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43094 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 521 இருக்கிறது. இந்நிலையில் 759 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 71  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17500-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 104 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16667-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 188-ஆக இருக்கிறது. இந்நிலையில் 645  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 24 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19569 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 65 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18942-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 330 இருக்கிறது. இந்நிலையில் 297 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 69 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26747-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 74 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25883-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 316 இருக்கிறது. இந்நிலையில் 548 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 52 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31481-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 54 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30587-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 583 இருக்கிறது. இந்நிலையில் 311 நபர்கள் கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 58 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42174 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 126 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41123ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள்  உயிரிழந்துள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 488 இருக்கிறது. இந்நிலையில் 563 கொரோனா பாதிப்பால் தேனி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 72 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54131-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 195 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 53440-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 374  இருக்கிறது. இந்நிலையில் 317 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் 45 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47178 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 38 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46347-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 408 இருக்கிறது. இந்நிலையில் 423 கொரோனா பாதிப்பால் திருநெல்வேலி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் 38நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26413 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25630-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 464 இருக்கிறது. இந்நிலையில் 319 கொரோனா பாதிப்பால் தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக,மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200லி உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை  வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் திறந்து வைத்தனர்.





அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிதிஅமைச்சர்," தி.மு.க தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்த போது கொரோனா  பரவல் அதிகமாக இருந்தது. அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சரி செய்து மீண்டும் மூன்றாம் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மதுரையில்  கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ளது. பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் , கண்காணிக்கவும் மதுரை மாநகர் பகுதிகளில் பறக்கும்படைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 



பெங்களூர் ஆய்வகத்தில் உள்ள டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனைக் கருவிகள் பற்றி கண்டறிந்து, அவற்றை வாங்கி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டெல்டா ப்ளஸ் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் கூடுதல் கட்டண வசூல் குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை கண்டறிந்து தீர்வு காண முடியும். தனி நபர்கள் அளித்த புகாரின்படி மதுரையில் உள்ள 12 தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்ட அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று உரியவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார்.




இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!