உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 688 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 27 லட்சத்து 34 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவந்த 739 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 586 நபர்களாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது.
நேற்று 698 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 688 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து 700க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு பதிவாகிய நிலையில், கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 700க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 7 ஆயிரத்து 821 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 123 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 110 நபர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 59 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 52 நபர்களுக்கும், திருப்பூரில் 49 நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்