TN Corona Update: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 560 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 83 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை தொற்று பாதிப்பு எற்பட்டவர்களில் 2,289 பேர் வீட்டில் தங்களை தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் விரைவில் தமிழ்நாடு தொற்று இல்லாத தமிழ்நாடாக மாறும் என முன்களப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையினை கூடிய விரைவில் அடைய பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.